எஸ். ஈஸ்வரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எஸ். ஈஸ்வரன்
S. Iswaran
The Trade Minister of Singapore, Shri S. Iswaran meeting the Union Minister for Urban Development, Housing & Urban Poverty Alleviation and Information & Broadcasting, Shri M. Venkaiah Naidu, in New Delhi on October 03, 2016 (cropped).jpg
2016 இல் ஈசுவரன்
போக்குவரத்து அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
15 மே 2021
விடுப்பில்: 12 சூலை 2023 முதல்[1]
பிரதமர் லீ சியன் லூங்
முன்னவர் ஒங் யி குங்
பின்வந்தவர் சீ கொங் தத் (பதில்)
தகவல் தொடர்பு அமைச்சர்
பதவியில்
1 மே 2018 – 14 மே 2021
பிரதமர் லீ சியன் லூங்
முன்னவர் யாக்கூப் இப்ராகிம்
பின்வந்தவர் யோசபீன் தியோ
வணிக, தொழிற்துறை அமைச்சர்
பதவியில்
1 அக்டோபர் 2015 – 30 ஏப்ரல் 2018
உடன் பணியாற்றுபவர் லிம் இங் கியாங் (வணிகம்)
பிரதமர் லீ சியன் லூங்
முன்னவர் லிம் இங் கியாங்
பின்வந்தவர் சான் சுன் சிங்
(வணிக, தொழிற்துறை)
பிரதமர் அலுவலக அமைச்சர்
பதவியில்
21 மே 2011 – 30 செப்டம்பர் 2015
பிரதமர் லீ சியன் லூங்
முன்னவர் லிம் குவீ குவா
பின்வந்தவர் தெசுமண்ட் லீ,
யோசபீன் தியோ
உட்துறை இரண்டாவது அமைச்சர்
பதவியில்
21 மே 2011 – 30 செப்டம்பர் 2015
உடன் பணியாற்றுபவர் மசாகசு சுல்கிப்லி
பிரதமர் லீ சியன் லூங்
முன்னவர் கா. சண்முகம்
பின்வந்தவர் தெசுமண்ட் லீ
வணிக, தொழிற்துறை அமைச்சர்
பதவியில்
21 மே 2011 – 30 செப்டம்பர் 2015
பிரதமர் லீ சியன் லூங்
பின்வந்தவர் தான் சீ லெங்
மேற்குக் கரை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 நவம்பர் 2001
முன்னவர் வான் சூன் பீ (ம.செ.க)
பசிர் பஞ்சாங் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2 சனவரி 1997 – 18 அக்டோபர் 2001
முன்னவர் புதிய தொகுதி
பின்வந்தவர் தொகுதி நீக்கப்பட்டது
தனிநபர் தகவல்
பிறப்பு சுப்பிரமணியம் ஈசுவரன்
1962[2]
சிங்கப்பூர்
அரசியல் கட்சி மக்கள் செயல் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கே மேரி டெய்லர்
பிள்ளைகள் 3
படித்த கல்வி நிறுவனங்கள் அடிலெயிட் பல்கலைக்கழகம் (இளங்கலை பொருளியல்)
ஆர்வர்டு பல்கலைக்கழகம் (முதுகலை, பொது நிர்வாகம்)

சுப்பிரமணியம் ஈஸ்வரன் (Subramaniam Iswaran[3] (பிறப்பு: 1962), சிங்கப்பூர் அரசியல்வாதி ஆவார். இவர் 2021 முதல் போக்குவரத்து அமைச்சராகவும், 2018 முதல் வணிகத் தொடர்புகள் அமைச்சராகவும் இருந்து வருகிறார்.[2] ஆளும் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினரான இவர் 2011 முதல் மேற்குக்கரைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

ஈசுவரம் முன்னதாக 2011 முதல் 2015 வரை பிரதமர் அலௌவலக அமைச்சராகவும், 2015 முதல் 2018 வரை வணிக, தொழிற்துறை அமைச்சராகவும், 2018 முதல் 2021 வரை தகவல், தொடர்புத்துறை அமைச்சராகவும் பதவியில் இருந்துள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு, ஈசுவரன் டெமாசெக் ஹோல்டிங்ஸ், வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சு உட்பட பொது மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றினார்.

1997 பொதுத் தேர்தலில் மேற்குக்கரை தொகுதியில் நான்கு பேர் கொண்ட மக்கள் செயல் கட்சி அணியில் போட்டியிட்டு 70.14% வாக்குகளைப் பெற்றார். இவர் தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு அமைப்புகளில் இயக்குநர் பதவிகளையும் வகித்துள்ளார்.

தொழில்

பொது மற்றும் தனியார் துறைகளில் ஈஸ்வரன் பணிபுரிந்தார். சிங்கப்பூர் இந்திய அபிவிருத்தி சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இயக்குனருமாகவும், டெமாசெக் ஹோல்டிங்ஸின் மூத்த துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

1997 ஆம் ஆண்டு சனவரி மாதம் நாடாளுமன்றத்திற்கு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 2004 முதல் சூன் 2006 வரை, இவர் நாடாளுமன்ற துணை சபாநாயகராக பணியாற்றினார்.

2006 ஆம் ஆண்டு சூலை 1இல், ஈஸ்வரன் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் ஒரு மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 1இல், இவர் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக பதவி உயர்வு பெற்றார். 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி இவர் கல்வி அமைச்சகத்தில் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஈஸ்வரன் 2011 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பிரதமரின் அலுவலகத்தில் அமைச்சராகவும், உள்துறை அமைச்சகத்தின் இரண்டாவது அமைச்சராகவும், வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

பெருநிறுவன வாழ்க்கை[4]

இவரது தொழில் வாழ்க்கையில் பல நிறுவனங்களில் இயக்குநராக இருந்துள்ளார். 1996 முதல் 1998 வரை சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் மூலோபாய அபிவிருத்தி இயக்குநராகவும், 2003 முதல் 2006 வரை டெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்தார் [5] இவர் நவம்பர் 2003 முதல் குயின்டில்ஸ் டிரான்ஸ்நேஷனலின் இயக்குநராக பணிபுரிந்தார், சன்னிங்கேல் டெக் என்பதில் 2005 சூலை முதல் 2006 சூன் வரை,[6] ஷின் கார்ப்பரேசனில் 2006 வரை,[7] ஷிசெம்ப்கார்ப் நிறுவனத்தில் 2003 சனவரி முதல் 2004 ஏப்ரல் வரை[8] மற்றும் பல தொழில்களில் இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.[9] சூன் 2003 முதல் சூன் 2006 வரை ஹைப்ளக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்தார்.[10] 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதியில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் யாகூப் இப்ராஹிம் ஓய்வு பெற்ற பின்னர் அத்துறைக்கு அமைச்சராக உள்ளார்.

கையூட்டு, ஊழல் புலனாய்வு விசாரணை

2023 சூலை 11 அன்று, ஈசுவரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இவரது கடவுச்சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.[11]

2023 சூலை 12 அன்று, ஊழல் புலனாய்வுப் பணியகத்தால் (CPIB) குறிப்பிடப்படாத ஊழல் விசாரணையில் உதவ ஈசுவரனும் வேறு சிலரும் அழைக்கப்பட்டனர். பணியகத்தின் விசாரணை குறித்து விளக்கமளிக்கப்பட்டதும், பிரதமர் லீ சியன் லூங், விசாரணைகள் முடியும் வரை உடனடியாக விடுமுறையில் செல்லுமாறு ஈசுவரனுக்கு அறிவுறுத்தினார்; சீ ஓன் தாட் பதில் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[12] போக்குவரத்து அமைச்சர் ஈசுரவனுடன் உள்ள தொடர்புகள் பற்றித் தகவல் அளிக்குமாறு புலனாய்வுப் பிரிவு Hotel Properties நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஓங் பெங் செங் என்பவருக்கு கைதாணை பிறப்பித்தது. அவரும் பின்னர் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.[13]

1986 நவம்பருக்குப் பிறகு, சிங்கப்பூரில் ஈசுவரனின் வழக்கு ஒரு அமைச்சரை உள்ளடக்கிய முதல் உயர்மட்ட ஊழல் விசாரணையாகும். 1986 இல் தேசிய வளர்ச்சிக்கான அமைச்சர் டெக் சியாங் வான் கையூட்டுக் குற்றச்சாட்டுகளுக்காக புனாய்வுப் பணியகத்தால் விசாரிக்கப்பட்டார், இருப்பினும் அவர் முறையாக குற்றம் சாட்டப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.[14][15]

கல்வி

ஈஸ்வரன் செயின்ட் ஆண்ட்ரூ பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்து, அங்கு முதல் வகுப்பு மரியாதை பட்டம் பெற்றார். ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் ஒரு பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

ஈஸ்வரன் கே. மேரி டெய்லர் என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு, மோனிசா ஒரு மகளும், சஞ்சையா, கிருஷண் இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

மேற்கோள்கள்

  1. "Transport Minister S Iswaran assisting in CPIB investigation, instructed to take leave of absence by PM Lee". Channel News Asia. July 12, 2023. https://www.channelnewsasia.com/singapore/iswaran-cpib-assist-investigations-ongoing-pm-lee-3622586. 
  2. 2.0 2.1 "PARL | MP". https://www.parliament.gov.sg/mps/list-of-current-mps/mp/details/s-iswaran. 
  3. "Alumni on the move". University of Adelaide. https://www.adelaide.edu.au/lumen/issues/16381/news16464.html. பார்த்த நாள்: 12 July 2023. "Subramaniam Iswaran [B Ec 1985, B Ec (Hons] 1986) will be appointed as Minister of State in the Ministry of Trade and Industry in the Singapore Cabinet." 
  4. "S. Iswaran: Executive Profile & Biography - Bloomberg". https://www.bloomberg.com/research/stocks/private/person.asp?personId=6090351&privcapId=6811108. 
  5. "RESIGNATION OF S ISWARAN AS DIRECTOR" இம் மூலத்தில் இருந்து 2017-09-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170917032248/http://investors.hyflux.com/newsroom/HYFLUX_MISC_30Jun06_Resignation_SIswaran.pdf. 
  6. "Resignation Of Non-Executive Director (2) Cessation Of Alternate Director". http://sunningdale.listedcompany.com/news.html/id/86731. 
  7. "Shin Corporation Public Company Limited 2006 Annual Report". p. 51. https://www.intouchcompany.com/download/Annual%20Report%20CG/SHIN-Annual%20Report_2006_Eng.pdf. 
  8. "SembCorp Industries Annual Report 2003". http://www.sembcorp.com/AR/ar2003/lead/lead_directors.html. 
  9. "Mr S Iswaran's Directorships". http://sunningdale.listedcompany.com/newsroom/SGXTemplate-MrIswaran.pdf. 
  10. "RESIGNATION OF S ISWARAN AS DIRECTOR" இம் மூலத்தில் இருந்து 2017-09-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170917032248/http://investors.hyflux.com/newsroom/HYFLUX_MISC_30Jun06_Resignation_SIswaran.pdf. 
  11. "Singapore Transport Minister S Iswaran was arrested and released on bail as part of CPIB probe" (in en). https://www.channelnewsasia.com/singapore/iswaran-arrested-cpib-bail-passport-impounded-ong-beng-seng-3629671. 
  12. "Transport Minister S Iswaran assisting in CPIB investigation, instructed to take leave of absence by PM Lee". Channel News Asia. July 12, 2023. https://www.channelnewsasia.com/singapore/iswaran-cpib-assist-investigations-ongoing-pm-lee-3622586. 
  13. "அமைச்சர் ஈஸ்வரனிடம் நடத்தப்படும் விசாரணை தொடர்பில் Hotel Properties Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஓங் பெங் செங்கிற்குக் கைதாணை". seithi.mediacorp. 14 சூலை 2023. https://seithi.mediacorp.sg/singapore/hpl-managing-director-ong-beng-seng-issued-notice-arrest-over-cpib-probe-involving-minister-s-iswaran-677226. 
  14. "Transport Minister S Iswaran assisting with corruption probe in case uncovered by CPIB, placed on leave by PM Lee". TODAY. 12 July 2023. https://www.todayonline.com/singapore/transport-minister-s-iswaran-assisting-corruption-probe-case-uncovered-cpib-placed-leave-pm-lee-2209691. 
  15. "Teh Cheang Wan case: No way a minister can avoid investigations" (in en). The Straits Times. 27 March 2015. https://www.straitstimes.com/singapore/teh-cheang-wan-case-no-way-a-minister-can-avoid-investigations. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._ஈஸ்வரன்&oldid=24969" இருந்து மீள்விக்கப்பட்டது