எம். ஏ. எம். ராமசாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எம்.ஏ.எம். ராமசாமி
பிறப்புஎம்.ஏ.எம். ராமசாமி
(1931-09-30)30 செப்டம்பர் 1931
இறப்பு2 திசம்பர் 2015(2015-12-02) (அகவை 84)
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா

எம். ஏ. எம். ராமசாமி (M. A. M. Ramaswamy), (செப்டம்பர் 30, 1931டிசம்பர் 2, 2015), செட்டிநாடு குழும நிறுவனங்களின் கூட்டுத்தாபகரும், தலைவரும் ஆவார். கர்நாடக மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதியுமாவார்.[1] புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் இணைவேந்தராகவும் பணியாற்றினார்.[2] சிறந்த தொழிலதிபராகவும்[3] 500 குதிரை பந்தயங்களை வென்றவராகவும்[4] விளங்கியவர்.

வாழ்க்கையும்,கல்வியும்

இவர் பிறந்தது சென்னையில் (செட்டிநாடு இல்லம்). தந்தை எம். ஏ. முத்தையா

செட்டியார். தாயார் ராணி லேடி மெய்யம்மை ஆச்சி. படிப்பு சர்ச் பார்க் ஆங்கிலப்பள்ளி, சாந்தோம் உயர் நிலைப்பள்ளி, பி.எஸ். உயர்நிலைப் பள்ளி, சென்னை விவேகானந்தா கல்லூரியில் பி.ஏ. பட்டம்.[5]

பணிகள்

விளையாட்டுத் துறையில் ஈடுபாடு கொண்ட ராமசாமி தனது பெரும்பகுதி நேரத்தை குதிரைப் பந்தயங்களில் செலவிடுகிறார். இவர் இந்திய வளைத்தடி கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோதே இந்திய அணி தனது ஒரே உலகக்கோப்பை வாகையர் பட்டத்தை வென்றது.

அறக்கட்டளை

எம்.ஏ.எம்.ராம சாமி செட்டியார் தனது 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் செட்டிநாடு அறக்கட்டளையை நிறுவியதுடன், அதன் தலைவராக ஸ்பிக் சேர்மன் ஏ. சி. முத்தையா செட்டியாரையும் நியமித்துள்ளார்.[6]

மறைவு

2 திசம்பர் 2015 அன்று உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் தனது 84வது அகவையில் காலமானார்.[7]

மேற்கோள்கள்

  1. "Venkaiah, Ramaswamy elected to Rajya Sabha". தி இந்து. June 24, 2004 இம் மூலத்தில் இருந்து 2005-02-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050211161351/http://www.hindu.com/2004/06/29/stories/2004062904690600.htm. பார்த்த நாள்: 2009-07-28. 
  2. "'Muthamizh Peraringnar' title conferred". தி இந்து. March 17, 2007. http://www.hindu.com/2007/03/17/stories/2007031722680200.htm. பார்த்த நாள்: 2009-07-28. 
  3. "Western Garnet draws up A.P. investment plan". தி இந்து. August 30, 2002 இம் மூலத்தில் இருந்து 2005-01-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050124010046/http://www.hinduonnet.com/2002/08/30/stories/2002083002351600.htm. பார்த்த நாள்: 2009-07-28. 
  4. "Dr. M.A.M. Ramaswamy felicitated". தி இந்து. January 15, 2008 இம் மூலத்தில் இருந்து 2008-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080116043136/http://www.hindu.com/2008/01/15/stories/2008011559472100.htm. பார்த்த நாள்: 2009-07-28. 
  5. தினமணி தீபாவளி மலர்,1999,. பக்கம்19
  6. எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விற்க முடிவு: தர்ம காரியங்களுக்கு நிதி திரட்ட நடவடிக்கை
  7. எம்.ஏ.எம். ராமசாமி மறைவுக்கு கருணாநிதி இரங்கல்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எம்._ஏ._எம்._ராமசாமி&oldid=27625" இருந்து மீள்விக்கப்பட்டது