எம். எஸ். முகம்மது இத்ரீஸ்
எம். எஸ். முகம்மது இத்ரீஸ் (6 திசம்பர் 1926- மே 2019) என்பவர் மலேசியத் தமிழரும் நுகர்வோர் உரிமை, சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பணிகளில் ஊடுபட்டு வந்தவரும், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவரும் ஆவார்.
பிறப்பு
இவர் தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளம் என்ற சிற்றூரில் 1926 திசம்பர் 6 அன்று பிறந்தார். தன் துவக்கக் கல்வியை முடித்தபிறகு தன் தந்தையுடன் வணிகத்தின் பொருட்டு மலேசியாவுக்கு குடிபெயர்ந்தார்.[1]
பணிகள்
மலேசியாவின் பினாங்கு நகரமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிய இவர், மலேசியாவில் தன்னார்வ இயக்கங்கள், செயல்பாட்டு இயக்கங்கள் போன்றவற்றை தோற்றுவித்து செயல்பட்டார். நுகர்வோர் நலனைப் பாதுகாக்க பினாங்கு பயனீட்டாளர் சங்கம் என்ற அமைப்பை மலேசியாவில் நிறுவினார். இந்த அமைப்பின் வழியாக பல விழிப்புணர்வு நூல்கள் வெளிவர காரணமாக இருந்தார். மேலும் பினாங்கு பயனீட்டாளர் குரல் என்ற இதழையும் நடத்தினார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் பல நூல்களை வெளியிட்டார். இயற்கை வேளாண் அறிஞர் கோ. நம்மாழ்வாரை, மலேசியாவுக்கு வரவழைத்து, தமிழ், சீன, மலேசிய விவசாயிகளுக்கு இயற்கை விவசாய நுட்பங்களைக் கற்றுக்கொடுக்க வைத்தார்.[2]
மறைவு
2019 மே மாதம் தன் 93வது வயதில் இவர் இறந்தார். இவரது பெயரை ஒரு பூங்காவுக்கு மலேசிய அரசு சூட்டமுடிவு செய்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ பாமயன் (25 மே 2019). "பசுமைச் சிந்தனைக்கு அடித்தளமிட்ட தமிழர்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 5 சூன் 2019.
- ↑ "இயற்கையில் கலந்த முகமது இத்ரீஸ்!". செய்தி. ஆனந்த விகடன். 17 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 5 சூன் 2019.