எம். என். எத்திராஜ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எம்.என்.எத்திராஜ் வண்ணார்
Ethiraj MLC.jpg
எத்திராஜ் திருவுருவ சிலை திருவொற்றியூர்,சென்னை
பிறப்பு(1919-09-19)19 செப்டம்பர் 1919
பரங்கிப்பேட்டை, சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு18 செப்டம்பர் 1970(1970-09-18) (அகவை 50)
கடலூர், தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்மா.எத்திராஜ்,எத்திராஜுலு
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்மாணிக்கம்-நாவம்மாள்
வாழ்க்கைத்
துணை
கோவிந்தம்மாள்
ஆதிலட்சுமி
பிள்ளைகள்சரோஜா
கலைவாணி

எத்திராஜ் வண்ணார் அல்லது எம்.எத்திராஜுலு (M.Ethirajulu, செப்டம்பர் 19, 1919 – செப்டம்பர் 18, 1970) சலவைத் தொழிலாளர் சங்கத்தில் முக்கிய தலைவராகப் பணியாற்றியவர். வண்ணார் சமூகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது உறுப்பினர். வண்ணார் சமூகத்தை சுயமரியாதை இயக்கத்துடன் இணைப்பதற்கான முயற்சியில் அவர் மிகவும் மறக்கமுடியாதவராக இருக்கிறார்.[1][2]

ஆரம்ப வாழ்க்கை

எம்.என்.எத்திராஜ் பரங்கிப்பேட்டை அருகில், மாணிக்கம்-நாவம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாக மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். தங்கள் குடும்ப தொழிலில் ஈடுபடுவதை விரும்பாததால், கல்வி கற்க மிகவும் விருப்பப்பட்டார். அவரது உறவினர் "சாமியார்" என்பவர் அவரைக் கடலூர் அழைத்து வந்து உதவினார். 1937 ஆம் ஆண்டு சென்னை உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.[3]

அரசியல் வாழ்க்கை

குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் உடன் எத்திராஜ்

அனைத்து இந்திய சலவைத் தொழிலாளர் மாநாடு சென்னையில் கே. காமராஜ் முன்னிலையில் நடைபெற்றது. 1969 ஆம் ஆண்டு டோபி பேரணி நடத்தப்பட்ட போது எத்திராஜ் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் மேலவைக்கு யாரை அனுப்ப வேண்டும் என்பதில் கடுமையான போட்டி இருந்தது. அப்போது காமராஜ் அவர்களால் எத்திராஜ் தேர்வு செய்யப்பட்டார். தங்கள் சமூகம் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று, தமிழ்நாடு வந்த இந்திரா காந்திக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்டது. 1970 ஆம் ஆண்டு தென் ஆற்காடு காங்கிரசு அலுவலகத்தில் காவல்துறை மூலம் எத்திராஜ் தாக்கப்பட்டார். மூன்றாவது முறையாக சட்டசபை உறுப்பினராகும் வாய்ப்பு பெற்றார். அனைத்து இந்திய டோபி சங்கம், தமிழ்நாடு வண்ணார் சங்கம் எனப் பல அமைப்புகளைத் தொடங்கினார். தென் ஆற்காடு பாரத் சேவா சமாஜ் அணி உறுப்பினராகவும் இருந்தார். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குழு உறுப்பினராகவும் இருந்தார். மேலும் "சலவை மணி" இதழ் ஆசிரியராக இருந்தார். அவர் சேர்ந்த சமூகம் கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயமாக இருந்தது. மற்ற மாவட்டத்தில் மிகவும் பிற்பட்ட சமுதாயமாக இருந்தது. இதை அவர் தமிழக அரசின் பார்வைக்குக் கொண்டு வந்தார். தன்னுடைய சமூகத்தை அனைத்து மாவட்டத்திலும் தாழ்த்தப்பட்டோர் பட்டியிலில் சேர்க்க வற்புறுத்தினர். மாநில அளவில் சமுதாய மாநாடுகளை அமைத்து அரசின் பார்வைக்கு அவர் சார்ந்த சமூகத்தின் நிலைமையை திரும்ப பார்க்க செய்தார். சலவை சோடா மிக குறைந்த விலையில் கிடைக்க மத்திய அரசை தொடர்புகொண்டு பெற்றுத்தந்தார்.[4][5]

மறைவு

மூன்றாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் போது உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டார். 1970 ஆம் ஆண்டு மாரடைப்பு மூலம் அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு காமராசர், மு. கருணாநிதி உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜி. கே. மூப்பனார் சென்னை திருவெற்றியூரில் அவருடைய சிலையைத் திறந்து வைத்தார்.[6]

மேற்கோள்கள்

  1. "மீண்டும் மேலவை ஏன்?-கருணாநிதி விளக்கம்". http://tamil.oneindia.com/news/2010/04/12/karunanidhi-council-dmk-assembly.html. பார்த்த நாள்: 13-10-2017. 
  2. எத்திராஜ் வண்ணார் விரிவான வாழ்க்கை வரலாறு; ஆசிரியர் கே.எஸ்.ஜானகிராமன், சென்னை.
  3. "விடுதலை" இம் மூலத்தில் இருந்து 2017-09-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170903074321/http://viduthalai.periyar.org.in/20100413/news11.html. பார்த்த நாள்: 13-10-2017. 
  4. "M. N. Ethiraj Vannar History" இம் மூலத்தில் இருந்து 3 செப்டம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170903074335/https://ethirajvannar.simdif.com/. பார்த்த நாள்: 13 October 2017. 
  5. "Tamilnadu Tiru Kurippu Thonda Nayanar Mahasabai". http://ttmkvannar.blogspot.in/?m=1. பார்த்த நாள்: 13-10-2017. 
  6. M.Ethirajalu (2010).Perunthalaivar Kamaraj Volunteers to became hard Ethiraj there idol opening ceremony of the flower.
"https://tamilar.wiki/index.php?title=எம்._என்._எத்திராஜ்&oldid=28067" இருந்து மீள்விக்கப்பட்டது