எம். உதயகுமார் (நடிகர்)
எம். உதயகுமார் (1938 - 25 சனவரி 2014) இலங்கைத் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
எம். உதயகுமார் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தார். தனது 13வது அகவையில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.[1] கிங்ஸ்லி எஸ். செல்லையா தயாரித்த தாலிக்கொடி, மலர்ந்தும் மலராத ஆகிய நாடகங்களில் நடித்தார்.[1] 1966 ஆம் ஆண்டில் கடமையின் எல்லை என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார்.[2] இதுவே இவர் நடித்து வெளிவந்த முதல் படமாகும். 1970 இல் வெளியான மஞ்சள் குங்குமம் திரைப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக உதயகுமார் நடித்தார்.[1] தென்னிந்திய நடிகர்கள் இலங்கையில் நடித்து வெளியான மாமியார் வீடு (1977) திரைப்படத்தில் நடிகை ஜெயாவின் காதலனாக நடித்தார். 1993 இல் வெளியான சர்மிளாவின் இதய ராகம் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தார். இதுவே இவரது கடைசித் திரைப்படம் ஆகும். இவற்றை விட சில சிங்களத் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.[1]
இறுதிக் காலங்களில் இவர் சில தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்திருந்தார். மொழிவாணன் இயக்ககத்தில் வெளிவந்த காதலுக்கு என்ன விலை என்ற நாடகத்தில் ஜெயகௌரியுடன் நடித்தார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 தம்பிஐயா தேவதாஸ். "எம். உதயகுமார்". வீரகேசரி (6 டிசம்பர் 2015).
- ↑ "கடமையின் எல்லை". தினகரன். 11 சூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2016.