எம். அனந்தநாராயணன்
மாதவியா அனந்தநாராயணன் (1 மே 1907 – 18 நவம்பர் 1981) என்பவா் ஒரு இந்திய வழக்கறிஞர் மற்றும் பொது பணி துறையில் பணிப்புாிந்தவா். பின்னா் மெட்ராஸ் மாகணத்தில் (பின்னர் தமிழ்நாடு) 1966 முதல் 1969 வரை உள்ள காலங்களில் தலைமை நீதிபதியாக பணிப்புாிந்தாா்.
ஆரம்ப வாழ்க்கை
அன்மாநதவியா் அனந்தநாராயணன் மே 1 1907 இல் சென்னையில் பிறந்தாா். தனது பள்ளிப் படிப்பை சர் எம். சிடி. முத்தையா உயர்நிலை பள்ளி மற்றும் இந்து உயர்நிலை பள்ளிகளில் பயின்றாா். மேலும் தனது பட்டப்படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தாா். முதுகலை பட்டயப் படிப்பை கேம்பிரிட்ஜ், கேன்விலில் மற்றும் கேயஸ் கல்லூரியில் பயின்றாா்.
வாழ்க்கை
அனந்தநாராயணன் 15 அக்டோபா் 1929 இல் இந்திய குடிமை பணியில் சேர்ந்து.துணை ஆட்சியராக பணிப்புாிந்தாா். மெட்ராஸ் (சென்னை) மாகாணத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் கூடுதல் நீதிபதியாகவும் பணிபுாிந்தாா். மாவட்ட நீதிபதியாக 8 மார்ச் 1940 இல் நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆகஸ்ட் 10, 1959 இல் பணியாற்றினாா். இறுதியாக தமிழ்நாட்டஉயா்நீதி மன்ற தலைமை நீதிபதியாக 1966 முதல், 1 மே 1969 ஒய்வு பெறும் வரை பணியாற்றினார். அது மட்டுமின்றி, சென்னை சட்டத் துறையிலும் 1955 முதல் 1959 வரை இயக்குநராக பணிப் புாிந்தாா்.
இறப்பு
அனந்தநாராயணன் 18 நவம்பர் 1981 இல் பாம்பாயிலுள்ள அவரது மகன் வீட்டில் இறந்தாா்..