எண்ணடுக்கிச் செய்யுள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

எண்ணடுக்கிச் செய்யுள் என்பது எண்களைக் கொண்டு அமைக்கப்படும் செய்யுள் வகைகளில் ஒன்றாகும். எண்ணடுக்கிச் செய்யுள் இயற்றும் மரபு சங்க காலந்தொட்டு இருந்து வருகிறது.

எடுத்துக்காட்டுகள்

புறநானூறு 109

“ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே
நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே”

என்று புறநானூற்றில் (புறம் 109:4-8, கபிலர் பாடியது) எண்ணடுக்குச் செய்யுள் உள்ளது.

சிலப்பதிகாரம்

“ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
அறுதொழி லந்தணர் பெறுமுகை வகுக்க”

என்று சிலப்பதிகாரத்தில் (சிலம்பு 23:67-70) செய்யுள் உள்ளது.

தேவாரப் பாடல்

“ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறா மறை நான்காய்வரு பூதமவை ஐந்தாய்
ஆறார் சுவை ஏழோசையொ டெட்டுத் திசை”

என இறைவனை திருஞானசம்பந்தர் (தேவாரம் திருவீழி மிழலை-2) எண்களின் ஏறுமுகமாய்ப் பாடியிருக்கிறார்.

திருச்சந்த விருத்தப் பாடல்

“பூ நிலாய வைந்துமாய்ப் புனற்கண் நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய்ச் சிறந்த காலிரண்டுமாய்
மீ நிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம்நின்னை யார் நினைக்க வல்லரே”

என இறைவனை திருமழிசைப்பிரான் (திருச்சந்த விருத்தம்-1) எண்களின் இறங்குமுகமாய்ப் பாடியிருக்கிறார்.

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=எண்ணடுக்கிச்_செய்யுள்&oldid=19877" இருந்து மீள்விக்கப்பட்டது