எச்2ஓ
H2O | |
---|---|
இயக்கம் | என். லோகநாத் இராஜாராம் |
தயாரிப்பு | பி. தன்ராஜ் |
கதை | உபேந்திரா |
இசை | சாது கோகிலா |
நடிப்பு | உபேந்திரா பிரபுதேவா பிரியங்கா திரிவேதி |
ஒளிப்பதிவு | எச். சி. வேணுகோபால் |
படத்தொகுப்பு | டி. சசிக்குமார் |
கலையகம் | தன்ராஜ் பிலிம்ஸ் |
வெளியீடு | 29 மார்ச்சு 2002 |
ஓட்டம் | 134 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம்[1] |
எச்2ஓ (H2O) என்பது 2002இல் வெளியான கன்னட மொழித் திரைப்படமாகும். படத்தை அறிமுக இயக்குனர்கள் என். லோகநாத், இராஜாராம் ஆகிய இருவரும் இயக்கியிருந்தனர். இது, தமிழில் "எச்2ஓ காவேரி" என பெயரிட்டு வெளியிடப்பட்டது. இது தன்ராஜ் பிலிம்ஸ் பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்டது. இதன் கதையை உபேந்திரா எழுதி நடித்துள்ளார். இவருடன் பிரபு தேவா, பிரியங்கா திரிவேதி பாபு மோகன், சாது கோகிலா, பேங்க் ஜனார்த்தன் ஆகியோரும் உடன் நடித்திருந்தனர்.
படத்தின் கதைக்களம் இரண்டு கிராமங்களுக்கிடையேயான சண்டையைச் சுற்றியே உள்ளது. ஏனெனில் காவேரி நீர் பிரச்சினை வெளியானதும் சர்ச்சைக்குரியதானது. ஆனால் திரையரங்க வசூலில் நன்றாக இருந்தது. படத்தின் படத்தொகுப்பினை டி.சசிகுமார் கவனிக்க ஒளிப்பதிவினை எச். சி. வேணுகோபால் மேற்கொண்டார். இந்த படம் தெலுங்கில் இதே பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. இது இந்தியில் தில் கி தட்கன் என்று பெயரிடப்பட்டது. இரு மாநிலங்களுக்கிடையேயான சர்ச்சைக்கான உருவகக் குறிப்பின் முக்கிய கருத்து 2016இல் வெளியான 'மராத்தி டைகர்ஸ்' என்ற மராத்தி திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது.
நடிகர்கள்
- உதயசங்கராக உபேந்திரா
- வைரமுத்துவாக பிரபுதேவா
- பிரியங்கா திரிவேதி
- பாபு மோகன்
- சாது கோகிலா
- பேங்க் ஜனார்த்தனன்
தயாரிப்பு பணி
படத்தின் கதை ஆரம்பத்தில் டாக்டர் ராஜ்குமார், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்காக எழுதப்பட்டது, அவர்கள் இருவரும் படத்தின் கதை காரணமாக நடிக்க மறுத்துவிட்டனர்.
ஒலிப்பதிவு
சாது கோகிலா படத்திற்கு இசையமைத்தார். பாடல்கள உபேந்திரா எழுதியிருந்தார். ஒலிப்பதிவு ஆல்பம் 27 மே 2001 அன்று பெங்களூரிலுள்ள காந்தீராவா ஸ்டுடியோஸில் வெளியிடப்பட்டது.
வரவேற்பு
இந்தப் படத்தின் மூலம் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு உபேந்திரா பெரிய திரைக்கு திரும்பினார். இதன் இசை வெளியீடு ஒரு புதிய சாதனையை உருவாக்கியது. 1 கோடிக்கு மேல் வணிகத்தை மேற்கொண்டது. "ஐ வன்னா சீ மை டார்லிங்", "ஹூவ் ஹூவ்", "நா நின்னா பிடலாரே", "பிடா பைடா", மற்றும் "தில் இல்டே" போன்ற பாடல்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தன.
கருத்து
எச்2ஓ என்பது கன்னட இளைஞனுக்கும் ஒரு தமிழனுக்கும் இடையிலான காவேரி என்ற பெண்ணின் மீதான ஒரு முக்கோண காதல் கதையாகும். இவர்கள், காவேரி என்ற பெண்ணின் காதலுக்காக போட்டியிடுகிறார்கள். இது உண்மையில் கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையிலான காவிரி நதி தகராறுக்கான உருவகக் குறிப்பு ஆகும்.
வெளியீடு
சர்ச்சை
படம் அதன் உள்ளடக்கம் காரணமாக சர்ச்சைக்குள்ளானது. கர்நாடகா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் படத்திற்கு தடை விதிக்கக் கோரினர், இரு தரப்பிலும் உள்ள மொழியியல் உணர்வுகளைத் திருப்திப்படுத்துவதற்காக, படத்தில் உள்ள தமிழ் வசனங்களை கன்னடத்திலும் அதற்கு நேர்மாறாகவும் மாற்றம் செய்வதன் மூலம் சமரசம் செய்ய உபேந்திரா கட்டாயப்படுத்தப்பட்டார். அரசியல் கட்சிகளின் கொடிகள் அடங்கிய காட்சிகள் மீண்டும் வெளியிடப்படுவதற்கு முன்பு நீக்கப்பட்டன.
விமர்சன வரவேற்பு
படம் வெளியானதும் அதிக நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. காவேரி நதி நீர் தகராறு போன்ற ஒரு முக்கியமான விஷயத்தை வணிக ரீதியாக விவரிக்க உபேந்திரா நிர்வகித்த விதத்தை விமர்சகர்கள் பாராட்டினர்.
பாக்ஸ் ஆபிஸ் செயல்திறன்
H 2 O கர்நாடகா முழுவதும் 28 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓட்டத்தை நிறைவுசெய்தது. மேலும் பெங்களூரில் இல் 75 நாட்கள் ஓடியது.
குறிப்புகள்
- ↑ Riti, M. D. (4 January 2001). "Prabhu Deva in a unique tap dance!". http://www.rediff.com/movies/2001/jan/04prabhu.htm.