எசு. தாமோதரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

எசு. தாமோதரன் (S Damodaran)(பிறப்பு 12 மார்ச் 1962) என்பவர் பத்மசிறீ விருதுபெற்ற தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தினைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆவார்.

பின்னணி

தாமோதரன் திருச்சிராப்பள்ளியில் உள்ள கிராமாலயா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். 1987-ல் நிறுவப்பட்ட கிராமாலயா, ஆரம்பத்தில் கிராமப்புற மக்களின் பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்தியது. பின்னர், முக்கியத்துவம் கருதி உடனடித் தேவையான சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கிடைக்காததை உணர்ந்து, தன்னுடைய சேவையின் கவனத்தினை தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்கு மாற்றியது. கிராமாலயா சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிப்பறைகளை வழங்குவதன் மூலம் திறந்தவெளியில் மலம் கழிப்பதை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிராமாலயா இப்போது இந்திய அரசின் நீர்சக்தி அமைச்சகத்தின் முக்கியமான ஆதார மையமாக உள்ளது. பெருநிறுவன சமூகப் பொறுப்பு முயற்சிகளின் கீழ் அரசு, நன்கொடையாளர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.[1][2] இந்த முயற்சியின் காரணமாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தாண்டவம்பட்டி கிராமத்தை 2003-ல் இந்தியாவின் முதல் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமமாக மாற்ற உதவியது.

கல்வி

தாமோதரன் 1984-ல் பெருவணிக செயலகத்தில் இளங்கலைப் பட்டமும், 1986-ல் முதுநிலை வணிகவியல் பட்டமும் மற்றும்[3] 2011-ல் முதுநிலை வணிக மேலாண்மையில் திட்ட மேலாண்மையில் பட்டமும் பெற்றார்.

பத்மசிறீ விருது

2022ஆம் ஆண்டில், சமூகப் பணித் துறையில் இவரது சிறப்பான சேவைக்காக நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[4] "தென்னிந்தியாவில் உள்ள கிராமங்கள் மற்றும் குடிசைப்பகுதிகளில் துப்புரவு மேம்பாட்டிற்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சமூக சேவகர்" என்ற இவரது சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.[5]

மேலும் படிக்க

  • எஸ் தாமோதரன் பேட்டி:"S. Damodaran is a swachhata champion". Department of Drining Water and Sanitation, Ministry of Jal Shakthi, Govt of India. https://sujal-swachhsangraha.gov.in/node/4475.  ஜல் ஜீவன் மிஷன் . குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை, ஜல் சக்தி அமைச்சகம், இந்திய அரசு . 20 பிப்ரவரி 2022 இல் பெறப்பட்டது .

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=எசு._தாமோதரன்&oldid=27759" இருந்து மீள்விக்கப்பட்டது