எசுன் தெமுர் கான்
Jump to navigation
Jump to search
| எசுன் தெமுர் கான் யுவானின் டைடிங் பேரரசர் | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| மங்கோலியப் பேரரசின் 10வது ககான் (பேரரசு பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே) யுவான் வம்சத்தின் 6வது பேரரசர் சீனாவின் பேரரசர் | |||||||||
| யுவான் வம்சத்தின் பேரரசர் | |||||||||
| ஆட்சிக்காலம் | அக்டோபர் 4, 1323 – ஆகஸ்ட் 15, 1328 | ||||||||
| முடிசூட்டுதல் | அக்டோபர் 4, 1323 | ||||||||
| முன்னையவர் | ஜெஜீன் கான் | ||||||||
| பின்னையவர் | ரகிபக் கான் | ||||||||
| பிறப்பு | நவம்பர் 28, 1293 | ||||||||
| இறப்பு | August 15, 1328 (aged 34) சங்டு | ||||||||
| மனைவி | பபுகன் கதுன் | ||||||||
| |||||||||
| மரபு | போர்சிசின் | ||||||||
| அரசமரபு | யுவான் | ||||||||
| தந்தை | கம்மலா | ||||||||
| தாய் | கொங்கிராட்டின் புயன் கெல்மிஸ் | ||||||||
எசுன் தெமுர் (மொங்கோலியம்: Есөн Төмөр; சீன கோயில் பெயர்: டைடிங்டி; சீனம்: 元泰定帝, நவம்பர் 28, 1293 – ஆகஸ்ட் 15, 1328) குப்லாய் கானின் ஒரு கொள்ளுப் பேரனும் மற்றும் யுவான் வம்சத்தின் பேரரசராக 1323 முதல் 1328 வரை ஆட்சி செய்தவரும் ஆவார். சீனாவின் பேரரசர் தவிர, இவர் மங்கோலிய பேரரசு அல்லது மங்கோலியர்களின் 10வது மாபெரும் கான் ஆகக் கருதப்படுகிறார், இருப்பினும் பேரரசின் பிரிவின் காரணமாக பெயரளவில் மட்டுமே இப்பெயர் அவருக்கு இருந்தது. இவர் மங்கோலியப் பாரம்பரியத்தின் மீது பற்றுக் கொண்டிருந்தார்.[1] இவருடைய பெயருக்கு மங்கோலிய மொழியில் "ஒன்பது இரும்பு கான்" என்று பொருளாகும்.
மேற்கோள்கள்
- ↑ B. Shirėndėv, Sh Luvsanvandan, A. Luvsandėndėv – Olon Ulsyn Mongolch Ėrdėmtniĭ III Ikh Khural, p.347