ஊர்வசி ஊர்வசி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
"ஊர்வசி ஊர்வசி"
பாட்டு
பதிவு1994
பஞ்சதன் ரெக்கார்ட் இன் மற்றும் ஏ.எம் ஸ்டுடியோஸ், சென்னை
நீளம்5:39
சிட்டைபிரமீட்
எழுதியவர்ஏ. ஆர். ரகுமான் (இசையமைப்பு)
வைரமுத்து (வரிகள்)
தயாரிப்பாளர்ஏ. ஆர். ரகுமான்

" ஊர்வசி ஊர்வசி " (Urvasi Urvasi) என்பது ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த ஓர் இந்திய தமிழ் திரைப்பட பாடல் ஆகும். இது 1994 ஆம் ஆண்டு காதலன் திரைப்படத்திற்காக வைரமுத்து எழுதியது. இந்த பாடலில் சுரேஷ் பீட்டர்ஸ், சாகுல் ஹமீது, ஏ. ஆர். ரகுமான் ஆகியோரின் குரல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப்படத்திற்கு இசையமைக்கபட்ட முதல் பாடல் "ஊர்வசி" ஆகும். இந்த பாடல் சமகால தமிழிசையின் ஒரு இசை வரைபடமாக இருந்தது.[சான்று தேவை] மேலும் எல்லா காலத்திற்குமான மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றாக இது மாறியது.[சான்று தேவை] பாடலின் இந்தி பதிப்பும் இதேபோல் இந்தியா முழுவதும் வெற்றிகரமான பாடலாக இருந்தது.

பிற பதிப்புகள்

இந்த பாடல் பின்னர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இந்தி பதிப்பின் காதலன் படப் பாடலானது, ஹம்சே ஹை முகாபலா என அழைக்கபட்டது. இது இந்தியாவில் 2.5 மில்லியன் தொகுதிகள் விற்பனையானது.[1] "ஊர்வசி" அதன் பிரபலமான பாடல்களில் ஒன்றாகும். இப்படால்  ராஜசிற்பியின் 1996 ஆண்டைய திரைப்படமான டேக் இட் ஈசி ஊர்வசி என்ற படத்திற்கான பெயராக அமைய உந்துதலாக இருந்தது.

2014 ஆம் ஆண்டில், அமெரிக்க ஹிப் ஹாப் பதிவுக் கலைஞர்கள் வில்.ஐ.எம் மற்றும் பாடகர் கோடி வைஸ் ஆகியோர் "ஊர்வசி ஊர்வசி" ஐ இட்ஸ் மை பர்த்டே என மீண்டும் உருவாக்கினர்.[2] இட்ஸ் மை பர்த்டே ஐக்கிய இராச்சியத்தில் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது, அங்கு வில்.ஐ.எம் இன் பத்து தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.[3] 2016 ஆம் ஆண்டில், இந்த பாடல் ஆஸ்திரேலிய திரைப்படமான லயனில் இடம்பெற்றது.

யோ யோ ஹனி சிங் 2018 இல் "ஊர்வசி" பாடலின் ரீமிக்ஸ் பதிப்பை வெளியிட்டார்.[4]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஊர்வசி_ஊர்வசி&oldid=28198" இருந்து மீள்விக்கப்பட்டது