ஊன்றித் தாண்டல்
Jump to navigation
Jump to search
ஊன்றித் தாண்டல் (pole vault) இக்கால உலக விளையாட்டுகளில் ஒன்று. சங்ககாலத்தில் குன்றக் குறவர்களின் சிறுவர்கள் இது போன்று விளையாடியிருக்கிறார்கள்.
மந்தி தன் வயிற்றில் குட்டியைப் பற்றிக்கொண்டு, மூங்கில் நுனியைப் பற்றி விசிந்தாடித் தவ்வுவது கண்ட குன்றத்துக் குறவரின் புதல்வர்கள் தாமும் மூங்கில் கொம்பைப் பற்றி விசிந்து ஆடி, வெற்றி கண்டு, அந்த வெற்றியை வெளிப்படுத்தக் கைகொட்டி மகிழ்ந்தார்களாம்.[1]
இவற்றையும் பார்க்க
அடிக்குறிப்பு
- ↑
செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்க்க்
கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்தெழுந்து
குறக்குறு மாக்கள் தாளம் கொட்டும்
குன்றகம் – நற்றிணை 95