ஊதுலை
Jump to navigation
Jump to search
ஊதுலை (Blast furnace) ஒரு உலோகவியல் உலைக்களம் ஆகும். இது கனிமங்களை உருக்கி தொழிற்சாலை உலோகங்களை உற்பத்தி செய்யப்பயன்படுகிறது. பொதுவாக இரும்பு உற்பத்தியில் அதிகமாக பயன்படுகிறது.
ஊதுலையின் மேலிருந்து கனிமம், எரிபொருள் மற்றும் இளக்கி தொடர்ந்து செலுத்தப்படுகிறது. அப்பொழுது கீழிருந்து காற்று, சில சமயம் ஆக்சிசன் செலுத்தப்படுவதால் உலையின் தொடர் வேதி வினை ஏற்படுகிறது. தொடர் வினையினால் கனிமம் உலோகமாக மாற்றம் அடைந்து உலையின் கீழ் பகுதியை அடைகிறது. இறுதியில் உருகிய உலோகம் மற்றும் கசடு பெறப்படுகிறது. இது கீழ் கதவு வழியாக வெளியேற்றப்படுகிறது. அனற் காற்று மேல்வழியாக வெளியேற்றப்படுகிறது.[1][2][3]