ஊட்டி வர்க்கி
மாற்றுப் பெயர்கள் | வர்க்கி |
---|---|
வகை | சில்லு |
முக்கிய சேர்பொருட்கள் | கோதுமை மாவு |
வேறுபாடுகள் | கோதுமை மாவு, ரவை |
ஊட்டி வர்க்கி (Ooty varkey) என்பது கோதுமை மாவு, அரிசி, ரவை, தண்ணீர், நெய், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றால் செய்யப்படும் ஒரு வகை பிஸ்கட் உணவு ஆகும். இது நன்கு வறுத்ததாகவோ அல்லது சுடப்பட்டதாக இருக்கலாம். இது பிரெஞ்சு அடுமனையின் உள்ளூர் காலனித்துவ கால மறு தயாரிப்பாகக் கருதப்படுகிறது.[1]
வரலாறு
இந்தியாவில் காலனி ஆதிக்கத்திலிருந்தே, ஊட்டி வர்க்கிக்கு பிரபலமானது. இது எப்படி, எப்போது வந்தது, எப்படி வர்கி என்று அழைக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது.[2]
புவிசார் குறியீடு முயற்சிகள்
ஊட்டி அடுமனை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு வழங்கினால், ஊட்டியில் உள்ள அடுமனைகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் எனத் தெரிவித்தார். வர்க்கி தயாரிப்பதற்கான பொருட்களை உள்ளூரிலிருந்தே பெறுகிறார்கள். ஊட்டியில் உள்ள நீர் மற்றும் வானிலையின் பண்புகள் வர்க்கிக்கு தனித்துவமான சுவையை அளிக்கிறது.[3]
விலங்கு கொழுப்பு
ஊட்டி வர்க்கியில் விலங்குகளின் கொழுப்பு இல்லை. ஊட்டியில் 90க்கும் மேற்பட்ட வர்கி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்களில் யாரும் விலங்குகளின் கொழுப்பை வர்க்கி உற்பத்தியில் பயன்படுத்துவதில்லை.[4]
மேற்கோள்கள்
- ↑ Nainar, Nahla (2018-08-17). "The journey of the famous Ooty 'varkey'" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/life-and-style/food/the-journey-of-the-famous-ooty-varkey/article24717476.ece.
- ↑ The Hindu, Tamil Nadu (7 December 2014). "'Ooty varkey' synonymous with the Blue Mountains". D.Radhakrishnan. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/ooty-varkey-synonymous-with-the-blue-mountains/article6669342.ece. பார்த்த நாள்: 11 December 2017.
- ↑ "Efforts on to get GI recognition for Ooty 'Varkey'". http://www.thehindu.com/news/cities/Coimbatore/efforts-on-to-get-gi-recognition-for-ooty-varkey/article7468334.ece.
- ↑ The Hindu, Cities, Coimbatore. "'No animal fat in Ooty varkey'". Special Correspondent. http://www.thehindu.com/news/cities/Coimbatore/no-animal-fat-in-ooty-varkey/article7714307.ece. பார்த்த நாள்: 11 December 2017.