உவமை உருவக மாற்றம்
Jump to navigation
Jump to search
'உவமை' என்பது ஒரு பொருளை அதைவிடச்சிறந்த மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக்கூறுவது ஆகும். உவமைத்தொடரில் உவமை முன்னும் உவமேயம் பின்னுமாக அமைந்துவரும். 'உருவகம்' என்பது உவமையையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபடுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக்கூறுவது ஆகும். உருவகத்தொடரில் உவமேயம்(உவமிக்கப்படும் பொருள்)முன்னும் உவமானம் (உவமை) பின்னுமாக அமைந்துவரும்.
உவமை
எடுத்துக்காட்டு
- மதிமுகம்=மதி போன்ற முகம்
இத்தொடரில் முகம் மதியோடு ஒப்பிடப்படுகிறது.மதி+உவமை; முகம்-உவமிக்கப்படும் பொருள் உவமேயம்)
உருவகம்
எடுத்துக்காட்டு
மலர்முகம், கைமலர், விழிகயல் இத்தொடர் முகம்வேறு மதிவேறு என்னும் வேறுபாடின்றி, 'முகமே மதி' எனப்பொருள்படுமாறு அமைந்துள்ளது.
உவமை உருவக மாற்றம்
உவமைத்தொடரை உருவகமாக மாற்றும்பொழுது, உவமேயம் முன்னும் உவமை பின்னுமாக வருமாறு தொடர் அமைக்கவேண்டும். உருவகத்தொடரை உவமைத்தொடராக மாற்றும்பொழுது உவமை முன்னும் உவமேயம் பின்னுமாக வருமாறு தொடரை அமைக்கவேண்டும்.
மேற்கோள்கள்
- பத்தாம் வகுப்பு-தமிழ் இலக்கணம்-ப.எண்:61-தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம்-மு.பதிப்பு1 - 1990
- பத்தாம்வகுப்பு-தமிழ்ப்பாடநூல்-ப.எண்:121,-தமிழ்நாடு பாடநூல் ம்ற்றும் கல்வியியல் பணிகள் கழகம்