உலோ. செந்தமிழ்க்கோதை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உலோ. செந்தமிழ்க்கோதை,விக்கியின் உயர் பயிலரங்கு, இராஞ்சி, சூன் 2018

உலோ. செந்தமிழ்க்கோதை (பிறப்பு: டிசம்பர் 22,1945) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். திருவள்ளூர் மாவட்டம், புச்சிரெட்டிபள்ளி எனும் ஊரில் பிறந்த இவர் பொறியியல் துறையில் அறிவுநுட்பம் வாய்ந்தவர். கிண்டி பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் இளவல் பட்டமும், கோவை பூ. ச. கோ. கல்லூரியில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். மின்வாரியத்தில் 33 ஆண்டுகள் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். முனைவர் பட்டம் பெற்றவர். தமிழக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி வரலாற்றில் அக்கறை கொண்டவர். இவர் எழுதிய “மக்கள் அறிவியல் இலக்கியம் ; நோக்கும் போக்கும்” எனும் நூல்[1] தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பொறியியல், தொழில்நுட்பம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. அறிவியல் தமிழ் ஆக்கத்தில் கவனம் செலுத்தி வரும் இவர் பல கலைச் சொற்களை உருவாக்கியவர். பொறியியல், அறிவியல், மக்கள் அறிவியல், அறிவியல் வரலாற்று வரைவியல், மெய்யியல், சமூகவியல் ஆகிய துறைகளிலும் கட்டுரை எழுதுபவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அறிவியல், தொழில்நுட்ப ஆய்விதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிவரும் உலோ. செந்தமிழ்க்கோதை தமிழ் இணையக் கல்விக்கழகம் வெளியிட்ட 14 கலைச்சொல் அகராதி அமைப்பிலும் பங்காற்றியுள்ளார்.

ஆதாரம்

  • அறிவியல் ஒளி பிப்ரவரி 2013 ஆறாம் ஆண்டுச் சிறப்பு மலரில் வெளியிடப்பட்ட கட்டுரை ஆசிரியர் பற்றிய குறிப்பு.
  1. "Makkal Ariviyal Ilakiyam Nokkum Pokkum - மக்கள் அறிவியல் இலக்கியம் நோக்கும் போக்கும் » Buy tamil book Makkal Ariviyal Ilakiyam Nokkum Pokkum online". பார்க்கப்பட்ட நாள் 2021-04-09.
"https://tamilar.wiki/index.php?title=உலோ._செந்தமிழ்க்கோதை&oldid=3442" இருந்து மீள்விக்கப்பட்டது