உலோகாயதச் சித்தர்
Jump to navigation
Jump to search
உலோகாயதச் சித்தர் என்பவர் பெயரில் சில பாடல்கள் கிடைக்கின்றன. இவர் பற்றி விரிவான விபரங்கள் இல்லை. ஆனால் இவர் எழுதியதாகக் கூறப்படும் பாடல்கள் உள்ளன. இவர் மிகவும் பிந்திய காலத்தவராகவே கருதப்படுகிறார். இந்தப் பாடல்களில் உலகாயதப் பார்வை உள்ளது.
எடுத்துக்காட்டுப் பாடல்
பொருளும் இருப்பும் இயற்கையும் முதன்மை - நாம்
போற்றும் உணர்வெண்ணம் இரண்டாம் தன்மை
கருதும் நம் ஆத்துமா அறிவின் துடிப்பு - அதனைக்
கடந்ததுமே கடவுள் எனல் கற்பனைப் பிடிப்பு.
மனிதனுக்கு மேல் ஒரு தெய்வமும் இல்லை - இந்த
மானுடம் போலொரு மெய்மையும் இல்லை
மனிதன் இயற்கையின் எதிரொலிச் சின்னம் உழைப்பு
மனம் இல்லையேல் அவன் விலங் காண்டி