உறையூர்ச் சல்லியங் குமரனார்
Jump to navigation
Jump to search
உறையூர்ச் சல்லியங் குமரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கத்தொகை நூல்களில் ஒரே ஒரு பாடல் உள்ளது. மருதத் திணைப் பாடலான அது குறுந்தொகை 309ஆம் பாடலாக அமைந்துள்ளது.
பாடல் சொல்லும் செய்தி
அவன் பரத்தையிடம் சென்று மீண்டான். எனினும் தோழி அவனை வீட்டுக்குள் நுழைய விடுகிறாள். அதற்கு ஒரு விளக்கமும் சொல்கிறாள். அந்த விளக்கம் இது.
நன்செய் வயல்களில் களை பறிப்போர் வயலில் பூத்திருக்கும் குவளைப் பூக்களைக் களைந்து எறிந்து வாட விடுவர். என்றாலும் வயலில் அது மீண்டும் முளைத்துப் பூக்கும். (அதுபோலத் தலைவியைத் தலைவன் எறிந்துவிட்டுச் சென்றாலும் மீண்டும் பூத்திருக்கிறாள்.)