உருபுமயக்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஒரு வேற்றுமை உருபு நிற்க வேண்டிய இடத்தில் வேறொரு வேற்றுமை உருபு வந்தாலும், பொருள் மாறுபடாது இருப்பது உருபுமயக்கம் எனப்படும்.

எடுத்துக்காட்டு

காலத்தினால் செய்த நன்றி

இத்தொடருக்கு, தக்ககாலத்தில் செய்த உதவி என்பது பொருள். காலத்தினால் என்னும் சொல்லின் ஈற்றில், ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு வந்துள்ளது. தனக்குரிய கருவிப்பொருளை உணர்த்தாமல்,ஏழாம் வேற்றுமைக்குரிய பொருளை உணர்த்துகிறது.அஃதாவது, இல் என்னும் ஏழாம் வேற்றுமை உருபு நிற்க வேண்டிய இடத்தில், ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு வந்து, தனக்குரிய பொருளை உணர்த்தாமல் ஏழாம் வேற்றுமை உருபுக்குரிய இடப்பொருளை உணர்த்துகிறது. இவ்வாறு, ஒரு வேற்றுமை உருபு தன் பொருளை உணர்த்தாமல் மற்றொரு வேற்றுமையின் பொருளை உணர்த்தி வருமாயின், அஃது உருபு மயக்கம் எனப்படும்.

யாதன் உருபிற் கூறிற்றாயினும் பொருள்செல் மருங்கில் வேற்றுமை சாரும்.

சான்றுகள்

  • ஒன்பதாம் வகுப்பு-தமிழ்ப்பாடநூல், தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம், சென்னை-6. முதற்பதிப்பு:1989.
  • ஆசிரியர் பட்டயப்பயிற்சி வளநூல்-தமிழ்மொழி கற்பித்தல் முதலாமாண்டு, தமிழ்நாட்டுப்பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
"https://tamilar.wiki/index.php?title=உருபுமயக்கம்&oldid=20175" இருந்து மீள்விக்கப்பட்டது