உயிர்மெய் எழுத்து
Jump to navigation
Jump to search
ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.
எடுத்துக்காட்டு:
'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.
- எடுத்துக்காட்டு
கீழேயுள்ள அட்டவணையில், மெய்யெழுத்து "க்", உயிரெழுத்துக்களுடன் சேர்ந்து, உயிர்மெய்யாகும் வடிவங்கள் காட்டப்பட்டுள்ளன.
அமைப்பு | உயிர்மெய் வடிவம் | ISO 15919 | IPA |
---|---|---|---|
க் + அ | க | ka | [kʌ] |
க் + ஆ | கா | kā | [kɑː] |
க் + இ | கி | ki | [ki] |
க் + ஈ | கீ | kī | [kiː] |
க் + உ | கு | ku | [ku], [kɯ] |
க் + ஊ | கூ | kū | [kuː] |
க் + எ | கெ | ke | [ke] |
க் + ஏ | கே | kē | [keː] |
க் + ஐ | கை | kai | [kʌj] |
க் + ஒ | கொ | ko | [ko] |
க் + ஓ | கோ | kō | [koː] |
க் + ஔ | கௌ | kau | [kʌʋ] |