உப்பாவை சொல்லும் கலை¨
Jump to navigation
Jump to search
உப்பாவை சொல்லும் கலை என்ற சிறுகதை 2005 ஆம் வருடம் காலச்சுவடு இதழில் வெளிவந்து சிறந்த பாராட்டைப்பெற்ற சிறுகதையாகும். இந்த கதையை எச். முஜீப் ரஹ்மான் எழுதினார். கதா என்ற அமைப்பும், காலச்சுவடு இதழும் இணைந்து நடத்திய சிறுகதை போட்டியில் இக்கதை சிறந்த கதையாக தேர்வு செய்யப்பட்டது. இந்த கதை உள்ளடங்கிய சிறுகதைத் தொகுப்பான தேவதைகளின் சொந்தக் குழந்தை நூலை புதுப்புனல் வெளியிட்டது.
உள்ளடக்கம்
இக்கதையை குறித்து கவிஞர் எச்.ஜி.ரசூல்[1] சொல்லும் போது, திராவிட அரசியல் குறித்த பகடியையும், இஸ்லாமிய நவீனத்துக்கு எதிரான பகடியும் இக்கதையில் இருக்கிறது என்றார். இந்த கதையை வெளியீட்டு நிகழ்வில் பெருமாள் முருகன் சிறந்த கதை என்று புகழ்ந்துரைத்தார்.