உடலாழம் (மலையாளத் திரைப்படம்)
உடலாழம் | |
---|---|
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | பனியா மொழி, மலையாளம் |
உடலாழம் (Udalaazham) இது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளம் மற்றும் கேரளாவின் காட்டுப்பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் பேசும் மொழியான பனியா மொழி கலந்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இப்படத்தில் மணி, ரம்யா வல்சாலா, அனுமோள், இந்திரன் போன்றோர் நடித்துள்ளார்கள்.[1]
கதை
கேரளாவின் அடர்ந்த காட்டில் வாழும் குலிகன் என்ற பழங்குடி திருநங்கை தனது சிறுவயதில் மாத்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். ஒரு ஆணாக பிறந்து வளர்ந்த அவனுக்கு ஒரு பெண்ணுக்கான குணம் மனதளவில் உள்ளது. வேலைக்காக காட்டைவிட்டு வெளியில் வந்துபோகும்போதெல்லாம் காமுகர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறான். இதில் இரண்டு காதல் கதை விவகாரங்கள் அம்மக்களின் வாழ்க்கையையே அழிவிற்கு கொண்டு செல்கிறது. அவர்களை காட்டைவிட்டு வெளியேற்றத் துடிக்கும் கூட்டமும், வெளியில் இருக்கும் அவனை வேட்டையாட துடிக்கும் கூட்டமும் அவனை தொடர்ந்து துரத்துகிறது.
மேற்கோள்கள்
- ↑ "Body Deep / Udalaazham" இம் மூலத்தில் இருந்து 2021-04-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210417115103/https://iffk.in/body-deep-udalazham/.