உச்சி வெயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உச்சி வெயில்
Uchi Veyil
இயக்கம்ஜெயபாரதி
தயாரிப்புடி. எம். சுந்தரம்
திரைக்கதைஇரவீந்திரன் இராமமூர்த்தி
இசைஎல். வைத்தியநாதன்
நடிப்புகுப்புசாமி
ஒளிப்பதிவுஇரமேஷ் வியாஸ்
படத்தொகுப்புபாலு சங்கர்
கலையகம்ஜூவாலா பிலிம்
வெளியீடு4 நவம்பர் 1990
ஓட்டம்100−105 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உச்சி வெயில் (Uchi Veyil) என்பது 1990 ஆம் ஆண்டு ஜெயபாரதி இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும்.[2]

நடிகர்கள்

தயாரிப்பு

13 நாட்களில் படமாக்கப்பட்ட உச்சி வெயில் திரைப்படத்தை ஜெயபாரதி இயக்கியிருந்தார்.[3] இந்திரா பார்த்தசாரதியின் கதையை அடிப்படையாகக் கொண்டு இரவீந்திரன் இராமமூர்த்தி திரைக்கதையை எழுதியிருந்தார்.[4][3][1]  டி.எம்.சுந்தரம் ஜுவாலா பிலிம் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். திரைப்படத்தின் மொத்த செலவு ₹4.8 லட்சம் (2021இல் ₹1.2 கோடி மதிப்பாகும்).

[5][3] ஒளிப்பதிவை இரமேஷ் வியாஸ் மேற்கொண்டார்,[6]  படத்தொகுப்பை பாலு சங்கர் மேற்கொண்டார்.[1][7]இத்திரைப்படத்திற்கு எல். வைத்தியநாதன் இசையமைத்திருந்தார்.[6] திரைப்படத்தில் பாடல்களோ நட்சத்திர நடிகர்களோ இடம்பெறவில்லை.[7][3][4]

வெளியீடு, வரவேற்பு

இத்திரைப்படம் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலும், 1990இல்[8] நடைபெற்ற சர்வதேச டொராண்டோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. இப்படம் வெளியிடப்பட்டு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[9]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உச்சி_வெயில்&oldid=30966" இருந்து மீள்விக்கப்பட்டது