ஈரோடு மகேசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஈரோடு மகேசு
Erode Mahesh
பிறப்பு15 அக்டோபர் 1981 (1981-10-15) (அகவை 43)
ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
பணிதொலைக்காட்சித் தொகுப்பாளர், நடிகர், பேராசிரியர்
அறியப்படுவதுகலக்கப் போவது யாரு?, நடுவுல கொஞ்சம் டிசுடர்ப் பண்ணுவோம், சிரிப்புடா,
வாழ்க்கைத்
துணை
சிறீதேவி

ஈரோடு மகேசு (Erode Mahesh) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். நடிகர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் கல்வியாளர் என பன்முகங்களுடன் ஊடகத்துறையில் இயங்கி வருகிறார். தொலைக்காட்சி துறையில் ஆற்றிவரும் பணிகளுக்காக நன்கு அறியப்படுகிறார். அசத்தப்போவது யாரு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மேடை நகைச்சுவையாளராக அறிமுகமானார். இளம் தலைமுறையினருக்கு மிகச் சிறந்த ஊக்கமூட்டும் பேச்சாளராக செயல்படுகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சியான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தாடி பாலாஜி, பிரியங்கா தேசுபாண்டே, பலகுரல் கலைஞர் சேது மற்றும் ஆர்த்தி ஆகியோருடன் இணைந்து நடுவராகப் பணியாற்றினார்.[1]

2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டரை திரைப்படத்தில் அறிமுகமான பிறகு சில தமிழ் படங்களில் துணை பாத்திரங்களில் மகேசு நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளி வந்த சிகரம் தொடு ஜம்புலிங்கம் 3டி போன்ற படங்களில் நடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு கணேசு வெங்கட்ராமனுடன் இணைந்து சங்கர் சுரேசு இயக்கிய இணையத்தளம் என்ற திரைப்படத்தில் முன்னணி நடிகராகவும் தோன்றினார்.[2] தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிப்பவர்களை ஊக்குவிக்கும் போது அட்ரா அட்ரா என்று உற்சாகப்படுத்தும் தமிழ் சொற்றொடர் மகேசுக்கான அடையாளமாக அறியப்படுகிறது.

வாழ்க்கைக் குறிப்பு

ஈரோட்டில் 1981 ஆம் ஆண்டில் மகேசு பிறந்தார். சந்திரசேகரன் - மீனாட்சி இணையர் இவரது பெற்றொர்களாவர். பள்ளிப் படிப்பை ஈரோட்டில் உள்ள இரயில்வே காலனி நகரவை மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். தமிழ் இளநிலை பட்டப் படிப்பை மயிலாடுதுறை ஆதினக் கல்லூரியிலும், முதுநிலை தமிழ் பட்டப்படிப்பை திருச்சி பிசப் ஊபர் கல்லூரியிலும் பயின்றார். தற்பொழுது தமிழில் முனைவர் பட்டப் படிப்பைத் தொடர்கிறார்.

தொழில்

ஆசிரியர்

தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்துறையில் நுழைவதற்கு முன்பு பள்ளி ஆசிரியராக மகேசு பணிபுரிந்தார். தனது மாணவர்களுடன் நட்பாக இருப்பது பேராசிரியராக தனது வாழ்க்கைக்கு ஒரு வெற்றிகரமான வழியை வகுத்ததாகவும் ஒரு நேர்காணலில் மகேசு குறிப்பிட்டுள்ளார். கற்பித்தல் மற்றும் ஊடகத்துறை இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் கற்பித்தலையே தேர்ந்தெடுப்பேன் என்றும் அந்நேர்காணலில் மகேசு குறிப்பிட்டுள்ளார்.[3] ஆசிரியராக பணியாற்றிய போது நடிகர் விசுவின் நிகழ்ச்சியான அரட்டை அரங்கத்தில் மகேசு உணர்ச்சிகரமான உரை நிகழ்த்தி பிரபலமானார்.

தொலைக்காட்சி

அசத்த போவது யாரு? என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக சேர்ந்து மகேசு சன் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அசதப்போவது யாரு மூலம் புகழ் பெற்ற பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்தார். ரம்யாவுடன் இணைந்து சோடி நம்பர் ஒன் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக உயர்ந்தார். 2017 ஆம் ஆண்டுக்கான விஜய் தொலைக்காட்சி விருதுகளின் போது சிறந்த தொகுப்பாளராக இரண்டாவது முறையாக விஜய் தொலைக்காட்சி விருதுகளுக்கு மகேசு பரிந்துரைக்கப்பட்டார்.[4][5]

திரைப்படவியல்

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்பு
2012 சட்டம் ஒரு இருட்டறை குமார் அறிமுகம்
2013 சும்மா நச்சுன்னு இருக்கு குணசீலன்
2014 சிகரம் தொடு ஆதி மூலம்
2016 ஜம்புலிங்கம் 3டி சகுனம்
2017 இணையதளம் கனபதி
2018 கிங்சு ஆப் காமெடி சூனியர்கள் நடுவர் நகைச்சுவை நிகழ்ச்சி, விஜய் தொலைக்காட்சி.[6]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஈரோடு_மகேசு&oldid=23786" இருந்து மீள்விக்கப்பட்டது