இ. வை. அனந்தராமையர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இ. வை. அனந்தராமையர் தமிழ்ப் பேராசிரியரும், புலவரும், பதிப்பாசிரியரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

இ. வை. அனந்தராமையர் தஞ்சாவூர் மாவட்டம், இடையாற்றுமங்கலத்தில் வைத்தீசுவர ஐயர், தைலம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். தமிழாசிரியராக மயிலாப்பூர் பி. எஸ். உயர்நிலைப்பள்ளியில் தமது ஆசிரியப் பணியைத் தொடங்கினார். உ. வே. சாமிநாதையரின் ஓய்விற்குப் பிறகு சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

உ.வே.சாவும் அனந்தராமையரும்

அனந்தராமையர் உ.வே.சாவின் அறிமுகம் கிடைக்கப் பெற்று அவருடன் இணைந்து பதிப்புப் பணியாற்றி வந்தார். ஐயரவர்களுக்கு இயல்பாகவே வாய்க்கப் பெற்ற நுண்ணறிவு சாமிநாதையரின் அறிமுகத்தால் மேலும் விரிவடைந்தது. அனந்தராமையரின் அறிவுத் திறனே உ. வே. சா, தாம் மாநிலக்கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு அப்பணிக்கு அனந்தராமையரைப் பரிந்துரைக்கக் காரணமாயிற்று.[1]

கலித்தொகை பதிப்புப்பணி

உ. வே. சாவுடன் இணைந்து பதிப்புப்பணியாற்றிய அனுபவத்தின் முதிர்ச்சியே கலித்தொகைக்கு உரையெழுத அடிப்படையாக அமைந்தது. கலித்தொகையின் முதல் பதிப்பினை 1887 ஆம் ஆண்டு சி. வை. தாமோதரம்பிள்ளை வெளியிட்டார். சி. வை. தாவின் பதிப்பினை அடுத்து இ. வை. அனந்தராமையரின் கலித்தொகை மூன்று சம்புடங்களாகப் பதிப்பிக்கப்பட்டது.[2]

  1. பாலைக்கலியும் குறிஞ்சிக்கலியும் முதற்சம்புடமாக 1924 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் வெளியிடப்பட்டது.
  2. மருதக்கலியும் முல்லைக்கலியும் இரண்டாவது சம்புடமாக 1925 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் வெளியிடப்பட்டது.
  3. 1931 நவம்பரில் நெய்தற்கலியும் சொற்குறிப்பு அகராதியும் (228 பக்கங்கள்) மூன்றாவது சம்புடமாக வெளியிடப்பட்டது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்நூலை முழுமையாக 1984 ஆம் ஆண்டில் மறுபதிப்பு செய்து வெளியிட்டது.[2]

பதிப்பித்த நூல்கள்

மேற்கோள்கள்

  1. ஜகந்நாதன், கி. வா. (1983). என் ஆசிரியப்பிரான். திருவான்மியூர்: மகாமகோபாத்தியாய டாக்டர். உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம். pp. 125–126.
  2. 2.0 2.1 விசாலாட்சி, ந. "சங்க இலக்கியப் பதிப்புகள்". Archived from the original on 2018-03-25. பார்க்கப்பட்ட நாள் 22 திசம்பர் 2017.
  3. 3.0 3.1 "தமிழ்ப் பொருளிலக்கணப் பேரகராதியில் எடுத்தாண்ட இலக்கிய இலக்கண நூல்களின் பட்டியல்". பார்க்கப்பட்ட நாள் 22 திசம்பர் 2017.
"https://tamilar.wiki/index.php?title=இ._வை._அனந்தராமையர்&oldid=26003" இருந்து மீள்விக்கப்பட்டது