இலட்சுமி சரவணகுமார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இலட்சுமி சரவணகுமார் (Lakshmi Saravanakumar) ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.[1] இவர் மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சார்ந்தவர். ஊர் ஊராக சுற்றி மக்களை படிப்பதையே தனது கல்வியாக நினைக்கும் இவர் பதினொன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்.

கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் என பன்முக படைப்புகளைத் தருபவர். இவர் இதுவரை மூன்று நாவல்களையும், முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். எழுத்தாளர் கோணங்கியின் மூலம் படைப்பு உலகத்திற்கு வந்தவர். திரைப்பட உதவி இயக்குநராக பணிபுரிகிறார்.

‘மயான காண்டம்' எனும் குறும்படம் மூலம் சர்வதேச அளவில் பிரபலமான சரவணகுமார், 'கானகன்' என்ற நாவலுக்கு 2016 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் 'யுவ புரஸ்கார்' விருதினை வென்றவராக அறியப்படுகிறார்.[2] இவர் எழுதிய உப்பு நாய்கள் என்ற புதினத்துக்காக 2012ஆம் ஆண்டுக்கான சுஜாதா நினைவு விருது பெற்றுள்ளார்[3]. [4]

எழுதிய நூல்கள்

  • நீல நதி (சிறுகதைகள்)
  • யாக்கை (சிறுகதைகள், 2010)
  • வசுந்தரா என்னும் நீலவானப் பறவை (2011)
  • மச்சம் (2013)
  • உப்பு நாய்கள் (புதினம்)
  • கானகன் (நாவல் 2014)
  • “மோக்லியை தொலைத்த சிறுத்தை (கவிதை தொகுப்பு 2014)
  • நீலப்படம் (புதினம், 2015)
  • கொமோரா (புதினம்)
  • உப்பு நாய்கள் (புதினம்)
  • ரூஹ் (புதினம், 2019)
  • வாக்குமூலம் (குறுபுதினம், 2020)
  • தனித்திருத்தலின் ருசி (கட்டுரை, 2020)
  • ஐரிஸ் (புதினம், 2021)
  • முதல் கதை (சிறுகதைகள் தொகுப்பாசிரியர் 2021)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=இலட்சுமி_சரவணகுமார்&oldid=3394" இருந்து மீள்விக்கப்பட்டது