இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம்
Typeஒளிபரப்பாக்கம் (ரூபவாகினி, செனல் ஐ, நேத்ரா தொலைக்காட்சி மற்றும் என்.டீ.வி)
Countryஇலங்கை
Availabilityதேசிய அளவில்
Ownerஇலங்கை அரசாங்கம்
Key people
மொகான் சமரநாயக்க (தவிசாளர்)
Launch date
பெப்ரவரி 14, 1982
Picture format
PAL
Official website
http://www.rupavahini.lk
Languageதமிழ்
சிங்களம்
ஆங்கிலம்

இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம், இலங்கையின் பொது நிதியில் நடாத்தப்படும் தேசிய தொலைக்காட்சி ஆகும். கல்வி[சான்று தேவை] மற்றும் பயன்தரும்[சான்று தேவை] தகவல்களை வழங்குவதற்காக இது யப்பான் மக்களால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

1982 ஆம் ஆண்டின் இல. 6ம் நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் தேசியத் தொலைக்காட்சிச் சேவையாக நிறுவப்பட்டது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நிகழ்ச்சிகள் தொகுத்து/தயாரித்து ஒளிபரப்பப்படுகின்றன.

ரூபவாகினி, சனல் ஐ ஆகிய இரண்டு அலைவரிசைகளில் தொழிற்படுகிறது. இவ்விரண்டு அலை வரிசைகளும் இலக்க முறை (அ) எண்மருவி (Digital) அல்லாது அனலொக் (அ) அலைமருவி (Analogue) முறையையே பயன்படுத்துகின்றன.

இது, இலங்கை அதிபரால் (சனாதிபதி) நியமிக்கப்பட்ட குழுவொன்றினால் நடாத்தப்படும் ஒரு நிறுவனமாகும். இதன் முழுமையான மேலாண்மை/முகாமைத்துவம் இலங்கை அதிபரால் நியமிக்கப்பட்ட உயரதிகாரி ஒருவரிடமே (Director-General) இருக்கும். நிகழ்ச்சிகளுக்கும் ஒளிபரப்புகளுக்குமான நிதி விளம்பரங்கள் மூலமும் அரச மானியங்கள் மூலமும் பெறப்படுகிறது.

தொலைக்காட்சிகள்

நேத்ரா தொலைக்காட்சி

  • இது தமிழ் மொழித் தொலைக்காட்சி அலைவரிசை ஆகும். 2008 முதல் தனது ஒளிபரப்பைத் துவங்கியது. இந்த அலைவரிசையில் திரைப்படங்கள், பாடல்கள், சமய நிகழ்ச்சி, செய்திகள் இடம்பெறுகின்றன. ராஜ் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மறு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.[1]

ரூபவாகினி

  • இது 20 மணித்தியால சிங்களம் மொழி தொலைக்காட்சி சேவை அலைவரிசை ஆகும். இந்தத் தொலைக்காட்சியில் தொடர்கள், நிகழ்ச்சிகள், பாடல்கள், திரைப்படங்கள் மற்றும் சமய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.

சானல் ஐ

என் டிவி

  • 2009 முதல் 2015 வரை ஒளிபரப்பான ஆங்கில மொழி தொலைக்காட்சியாகும்.[2]

மேற்கோள்கள்

  1. "Nethra TV Tv Schedules". www.peotv.com.
  2. "Playing TV - "Prime TV" and "N TV"". TV & Radio Sri Lanka.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:இலங்கையில் தொலைக்காட்சி