இர. பி. பட்நாயக்
இர. பி. பட்நாயக் R. P. Patnaik | |
---|---|
2022 இல் இர. பி. பட்நாயக் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 10 மார்ச்சு 1970 |
தொழில்(கள்) |
|
இசைத்துறையில் | 1999–தற்போது வரை |
இரவீந்திர பிரசாத் பட்நாயக் (Ravindra Prasad Patnaik) ஓர் இந்திய இசையமைப்பாளரும், பாடகரும், நடிகரும்,[1][2] திரைக்கதை ஆசிரியரும் மற்றும் திரைப்பட இயக்குநரும்[3][4] ஆவார். இவர் தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் மொழிப் படங்களில் பணியாற்றுகிறார்.[5] இவர் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் மூன்று நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார்.[6][7] இவர் தனது நேரடி இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதற்காக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார்..
பட்நாயக் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற விருப்பத்துடன் திரைப்படத் துறையில் நுழைந்தார். முதலில் நீகோசம் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக மாறிய தேஜா இவருக்கு சித்திரம் படத்தின் மூலம் ஒரு வாய்ப்பை கொடுத்தார்.[8] பட்நாயக் 2008 ஆம் ஆண்டு வெளியான அந்தமைன மனசுலோ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[9] பின்னர், மனலோ ஒக்கடு படத்தை இயக்கினார்.[10] இவரது சகோதரர் கௌதம் பட்நாயக் என்பவரும் கேராட்டம் (2011) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[11]
மேற்கோள்கள்
- ↑ "Composer Patnaik turns director with 'Andhamaina Manasulo and Broker'". The Hindustan Times (New Delhi). 9 September 2007.
- ↑ G, Jalapathy (14 August 2005). "22 Minutes (Short film) -Review". Telugucinema. http://www.telugucinema.com/c/publish/moviereviews/22minutes.php.
- ↑ https://www.ndtv.com/entertainment/singer-r-p-patnaik-set-for-hollywood-debut-with-amy-614059
- ↑ staff (11 March 2013). "R P Patnaik's Tulasidalam". Sify இம் மூலத்தில் இருந்து 8 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140108152718/http://www.sify.com/movies/r-p-patnaik-s-tulasidalam-news-telugu-ndllzHhdhig.html.
- ↑ Patnaik, Santosh (31 December 2007). "Delicacies, entertainment await ISC delegates". The Hindu (Chennai): p. 1.
- ↑ "ANDHRA PRADESH STATE NANDI FILM AWARDS FOR THE YEAR 2016". https://www.apsftvtdc.in/pdf/Nandi-Film-Awards-GOs-and-Results/FILM%202016.pdf.
- ↑ "ANDHRA PRADESH STATE NANDI FILM AWARDS FOR THE YEAR 2016". https://www.apsftvtdc.in/pdf/Nandi-Film-Awards-GOs-and-Results/FILM%202016.pdf.
- ↑ staff (16 February 2008). "Andamaina Manasulo Review". Oneindia இம் மூலத்தில் இருந்து 2 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131102211512/http://entertainment.oneindia.in/telugu/reviews/2008/andamaina-manasulo-review-160208.html.
- ↑ staff (8 September 2007). "RP Patnaik takes up direction". Indiaglitz இம் மூலத்தில் இருந்து 2 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131102142757/http://www.indiaglitz.com/channels/hindi/article/33467.html.
- ↑ Shekhar (11 March 2013). "Thulasidhalam is a horror-thriller: RP Patnaik". Oneindia இம் மூலத்தில் இருந்து 2 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131102211551/http://entertainment.oneindia.in/telugu/news/2013/thulasidhalam-horror-thriller-rp-patnaik-interview-105058.html.
- ↑ "Keratam review. Keratam Telugu movie review, story, rating". https://www.indiaglitz.com/keratam-telugu-movie-review-13576.