இரும்பு குதிரைகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இரும்பு குதிரைகள்
நூல் பெயர்:இரும்பு குதிரைகள்
ஆசிரியர்(கள்):பாலகுமாரன்
வகை:புதினம்
துறை:இலக்கியம்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பதிப்பகர்:திருமகள் நிலையம்
55 வெங்கட்நாராயணா சாலை,
தியாகராய நகர்
சென்னை 600 017
பதிப்பு:முதற்பதிப்பு 1984
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

இரும்பு குதிரைகள் பாலகுமாரனின் பிரசித்தி பெற்ற புதினம். இதில் கதையின் நாயகன் ஒரு லாரி கம்பெனியில் பொறுப்பில் இருப்பதாகவும், அது சம்பந்தமாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், சந்திக்கும் மனிதர்களையும் பற்றி விளக்கியிருப்பார். தனக்குள்ளே உள்ள ஓரு படைப்பாளியை எப்போதுமே வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் அவனுக்கு, அவன் குடும்பமும் அலுவலகமுமே தனக்குள்ள தடைகள் என்று உணர்ந்தும் அவைகளிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் அவன் உணர்வுகளை ஆசிரியர் அவருடைய நடையிலேயே விளக்கியிருப்பார். இலக்கிய உலகில் அனைவராலும் விரும்பி படிக்கப்பட்ட, பாராட்டு பெற்ற புதினம்.[சான்று தேவை] 1984-ல் வெளிவந்தது.


"https://tamilar.wiki/index.php?title=இரும்பு_குதிரைகள்&oldid=16338" இருந்து மீள்விக்கப்பட்டது