இரா. பசுமைக்குமார்
Jump to navigation
Jump to search
இரா. பசுமைக்குமார் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் போன்றவற்றின் விழிப்புணர்வுப் பணிக்கான சாதனையாளர் விருது பெற்றவர். சிறந்த கவிஞர், பத்திரிகையாளர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். 15க்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய “தமிழகச் சுற்றுச் சூழல்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.