இரா. நல்லகண்ணு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
இரா. நல்லகண்ணு
மத்தியக் குழு உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1925-12-26)26 திசம்பர் 1925
திருவைகுண்டம், பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம் (தற்பொழுது தூத்துக்குடி மாவட்டம்), தமிழ்நாடு, இந்தியா
இறப்பு25 February 2026(2026-02-25) (aged 100)
சென்னை, தமிழ்நாடு
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி
துணைவர்இரஞ்சிதம் (1958 தி)
பிள்ளைகள்காசிபாரதி, மரு. ஆண்டாள்
வாழிடம்சென்னை
வேலைஅரசியல்வாதி

இரா. நல்லகண்ணு (R. Nallakannu, 26 திசம்பர் 1925 – 25 பெப்ரவரி 2026)[1][2] இந்திய இடதுசாரி அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவராகவும், கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் செயலாளராக 13 ஆண்டு காலமும் இருந்தவர். 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.[3]

வாழ்க்கை வரலாறு‍

பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம் (தற்பொழுது தூத்துக்குடி மாவட்டம்) ஸ்ரீவைகுண்டத்தில் 26 திசம்பர், 1925-ஆம் ஆண்டு பிறந்தார். நல்லகண்ணு 18-ஆவது வயதிலேயே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். [4] ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் நெல் மூட்டை வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த மாவட்ட ஆட்சியர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார். இவருடைய முதல் நடவடிக்கை இதுவாகும். இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார். அப்பாவிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்டபோது நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகள் இருட்டறை வாழ்க்கை, வெளியில் வந்தபோது நாடு சுதந்திரம் அடைந்திருந்தது. அன்று தொடங்கியது அரசியல் பயணம் அவரது இறுதி மூச்சு வரை தொடர்ந்தது.

சாதி எதிர்ப்புப் போராளி

இவருடைய 80-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்துக் கட்சிக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு இலட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்திற்கும் கொடுத்துவிட்டார்.

சாதிய அக்கிரமங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். அதற்காக தன் வாழ்க்கையைச் சிறைக்கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தார்.

விருதுகள்

  • தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து சகாயோகி விருது (14 ஆகத்து 2007)[5]
  • தமிழக அரசின் அம்பேத்கார் விருது (2007)[6]
  • அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நல மன்றத்தின் சமூக சேவைக்கான காந்திய விருது (3 அக்டோபர் 2008)[7]
  • மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் ஜீவா விருது (21 சனவரி 2009)[8]
  • தகைசால் தமிழர் விருது (2022)[9]

போட்டியிட்ட மக்களவைத் தொகுதி

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு % எதிர்த்துப் போட்டியிட்டவர் எதிர்த்துப் போட்டியிட்டவர் கட்சி எதிர்த்தவர் வாக்கு %
1999 இந்தியப் பொதுத் தேர்தல் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தோல்வி 43.02 ச. பொ. இராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சி 49.21

இறப்பு

நல்லக்கண்ணு, 2026 பெப்ரவரி 1 அன்று உடல்நலக் குறைவால், சென்னை அரசு இராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.‌ தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பெப்ரவரி 25 அன்று பிற்பகல் 1:55 மணியளவில் தனது 101-ஆவது அகவையில் காலமானார்.[10]

மேற்கோள்கள்

  1. "காலமானார் நல்லகண்ணு : மருத்துவமனை அறிக்கை வெளியீடு". பிபிசி தமிழ். 2026-02-25. https://www.bbc.com/tamil/articles/cp32qzz50z1o. 
  2. "R. Nallakannu, veteran communist leader from Tamil Nadu, passes away". The Hindu. 25 February 2026. https://www.thehindu.com/news/national/tamil-nadu/r-nallakannu-veteran-communist-leader-from-tamil-nadu-passes-away/article70674915.ece. 
  3. "Fronts and challenges". Hindu.com. Retrieved 2012-07-23.
  4. "பெரியார், கலைஞருக்குக் கிடைக்காத வாய்ப்பைப் பெற்றவர் நல்லகண்ணு". தமிழ் முரசு. https://www.tamilmurasu.com.sg/tamilnadu/nallakannu-great-artist-got-opportunity-not-available-him. பார்த்த நாள்: 3 July 2025. 
  5. "Tamil Nadu News : Gandhi represented vitality of Indian culture, history, says Barnala". தி இந்து. 2007-08-15. Archived from the original on 2007-10-21. Retrieved 2012-07-23.
  6. "Tamil Nadu / Chennai News : Ambedkar Award for Nallakannu". தி இந்து. 2008-01-10. Archived from the original on 2008-01-13. Retrieved 2012-07-23.
  7. "Tamil Nadu News : "Spread Gandhian ideals"". தி இந்து. 2008-10-04. Archived from the original on 2008-10-08. Retrieved 2012-07-23.
  8. "Tamil Nadu / Tiruchi News : Jeeva Award conferred on R. Nallakannu". தி இந்து. 2009-01-22. Archived from the original on 2009-01-25. Retrieved 2012-07-23.
  9. "அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி நல்லக்கண்ணு அனைவருக்கும் வழிகாட்டியாக விளங்குகிறார்- மு.க.ஸ்டாலின் புகழாரம்". மாலைமலர். https://www.maalaimalar.com/news/tamilnadu/nallakannu-guide-to-all-mk-stalin-praise-753534. பார்த்த நாள்: 3 July 2025. 
  10. "சிறைவாசம் முதல் செங்கொடி வரை: காலமானார் தோழர் நல்லகண்ணு". 2026-02-25.
"https://tamilar.wiki/w/index.php?title=இரா._நல்லகண்ணு&oldid=437763" இலிருந்து மீள்விக்கப்பட்டது