இராயபுரம் ராமானுஜன் அருங்காட்சியகம்
இராயபுரம் ராமானுஜன் அருங்காட்சியகம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, இராயபுரத்தின் சோமு செட்டித் தெருவில் உள்ள ஒரு சிறிய அருங்காட்சியகமாகும்.[1] இந்த அருங்காட்சியகமானது இராமானுஜனின் 125 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மகமாயி அம்மாள் தங்கப்பா நாடார் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையால் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த அருங்காட்சியகத்தில் இராமானுஜனின் வாழ்கையில் நடந்த நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் அவருடைய அம்மா கோமளத்தம்மாள், மனைவி ஜானகி, ராமானுஜன் வீட்டின் முன் தோற்றம், அவர் பயன்படுத்திய பலகை , ராமானுஜன் நோயில் வீழ்ந்தபோது பயன்படுத்திய பாத்திரம், அவர் படித்த பள்ளிக்கூடம், பரிசுப் பொருட்கள், சான்றிதழ்கள் மற்றும் இறப்பு சான்றிதழ் என அனைத்தும் ஒளிப்படங்களாக உள்ளன. மேலும், இராமானுஜத்தின் 5 புத்தகங்களும் இங்கே உள்ளன.
கணித மேதை ஹார்டிக்குப் புரியாத கணக்குப் புதிருக்கு இராமானுஜன் அளித்த விடையை ஒளிப்படமாக்கியும் வைக்கப்பட்டுள்ளது. இராமானுஜத்தின் கணிதச் சூத்திரம், தேற்றம் போன்ற அரிய பொக்கிஷங்களையும் சேகரித்து இங்கே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். சிறார்கள் கணிதத்தைச் சுலபமாக அறிந்துகொள்ள இங்கே கணித உபகரணங்களும், சிறார்களுக்கென ஒரு நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
- ↑ "சீனிவாச இராமானுஜன்". கட்டுரை (கீற்று). 26 ஜனவரி 2012. http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/18187-2012-01-26-07-41-35?code=1&state=tt. பார்த்த நாள்: 14 சூன் 2017.
- ↑ - கனிமொழி ஜி (14 சூன் 2017). "கணித மேதையின் அருங்காட்சியகம்!". கட்டுரை (தி இந்து). http://tamil.thehindu.com/society/kids/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article9726185.ece. பார்த்த நாள்: 14 சூன் 2017.