இராம. வீரசிங்கம்
Jump to navigation
Jump to search
இராம. வீரசிங்கம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
இராம. வீரசிங்கம் |
---|---|
பிறந்ததிகதி | 1942 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
இரா. மாணிக்கம் (பி: 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராவார். மேலும் இவர் மலேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநராகவும், மலாயாத் தமிழ்ப் பள்ளிகள் ஆசிரியர் தேசிய சங்க "ஆசிரியர் ஒளி" இதழின் ஆசிரியராகவும் பதவிகளை வகித்துள்ளார். ஈப்போவில் உலகத் திருக்குறள் மாநாட்டினை (2000) ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார்
எழுத்துத் துறை ஈடுபாடு
1957 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், தொழிற் சங்கம் மற்றும் கூட்டுறவு பற்றிய கட்டுரைகள் மற்றும் அனைத்துலக மாநாடுகளில் கூட்டுறவு தொடர்பான கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
- "உலகத் திருக்குறள் மாநாடு, ஈப்போ" (மாநாட்டு நிகழ்வுகள் தொகுப்பு, 2000)
பரிசில்களும், விருதுகளும்
- கோ. சாரங்கபாணி விருது (1990) - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- "ஆசிரியர் மணி" பட்டம் - தமிழ் நாட்டில் ஆசிரியர் தின விழா
- அரசாங்க விருதான AMN