இராமகிருஷ்ணன் (நடிகர்)
Ramakrishnan | |
---|---|
பிறப்பு | 1982 மெணசி, தருமபுரி மாவட்டம் அரூர், தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | ஆதிராம் |
பணி | திரைப்பட நடிகர், இயக்குநர், கதாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–முதல் |
உயரம் | 155 |
வாழ்க்கைத் துணை | 1 |
இராமகிருஷ்ணன் என்பவர் தமிழ் மொழி படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் ராஜ்மோகனின் கிராமிய படமானகுங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் (2009) திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து, போங்கடி நீங்களும் உங்கள் காதலும் (2014) மற்றும் ஒரு கனவு போல (2017) உள்ளிட்ட படங்களில் முன்னணி மற்றும் துணை வேடங்களில் நடித்துள்ளார்.
தொழில்
இயக்குநர் கே. பாலச்சந்தரிடம் உதவியாளராக திரைத்துறையில் பணியினைத் தொடங்கிய இராமகிருஷ்ணன், இயக்குநர் சேரனிடம் பணிபுரிந்தார்.[1] ராஜ்மோகன் இயக்கிய குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் (2009) என்ற கிராமப்புற படத்தில் நாயகனாக நடிக்க எஸ். பி. பி. சரண் கேட்டபோது தனது முடிவை மாற்றி நடிக்க ஆரம்பித்தார். பாண்டிராஜின் பசங்க (2009) படத்தில் நடிப்பதற்குப் பதிலாக அந்தப் படத்தில் பணியாற்றினார்.[2] பின்னர் இவர் இதைத் தொடர்ந்து ராசு மதுரவன் இயக்கிய கோரிப்பாளையம் (2010) மற்றும் நீண்ட கால தாமதமான வெட்கத்தைக் கேட்டல் என்ன தருவாய் ஆகிய படங்களில் நடித்தார். இதில் இவர் முன்னணி நடிகராக நடிக்கவிருந்தார், ஆனால் இவருக்குப் பதிலாக அசோக் நடித்தார்.[3] இராமகிருஷ்ணனும் சரண் தயாரிப்பு நிறுவனத்தின் படத்தினை இயக்க ஒப்புக்கொண்டார், ஆனால் படம் இறுதியில் வெளியிடப்படவில்லை.[4]
2014-இல், இவர் போங்கடி நீங்களும் உங்கள் காதலும் (2014) என்ற திரைப்படத்தை இயக்கி நடித்தார். இது பாலியல் கருப்பொருளுக்காக விமர்சகர்களால் பரவலாக விமர்சிக்கப்பட்டது.[5] 2017-இல், இவர் எந்த நேரத்திலும் மற்றும் ஒரு கனவு போல ஆகிய படங்களில் தோன்றினார்.[6]
திரைப்படவியல்
ஆண்டு | திரைப்படம் | பங்கு | குறிப்புகள் |
---|---|---|---|
2002 | ஏப்ரல் மாதத்தில் | கதிரின் நண்பர் | |
2009 | குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் | கூச்சன் | |
2010 | கோரிப்பாளையம் | ஏ முதல் இசட் வரை | |
2011 | முரண் | விருந்தினர் தோற்றம் | |
2013 | வெட்கத்தைக் கேட்டல் என்ன தருவாய் | விருந்தினர் தோற்றம் | |
2014 | போங்கடி நீங்களும் உங்க காதலும் | இராமகிருஷ்ணன் | இயக்குநர் |
2017 | எந்த நேரத்திலும் | ரெக்ஸ் | |
ஒரு கனவு போல | நட்ராஜ் | ||
2023 | வர்ணாஷ்ரமம் | இராமானுஜம் | |
மாமன்னன் | இராமகிருஷ்ணன் | ||
சிம்மம் | கேபி |
தொலைக்காட்சி
ஆண்டு | தலைப்பு | பங்கு | மொழி | தொலைக்காட்சி |
---|---|---|---|---|
2017 | ஸ்டார் வார்ஸ் | தமிழ் | சன் டி.வி |
மேற்கோள்கள்
- ↑ "It was a blessing to work with KB sir". The Times of India. 16 January 2017.
- ↑ Subramanian, Anupama (12 January 2018). "Ramakrishanan earns Pandiraj praise". Deccan Chronicle.
- ↑ Kumar, S. R. Ashok (30 November 2013). "Audio Beat: Pongadi Neengalum Unga Kadhalum - Trendy tunes". தி இந்து.
- ↑ "Ramakrishnan debuts as a director with 'Pongadi Neengalum Unga Kadhalum'". Deccan Chronicle. 17 April 2014.
- ↑ "Ramakrishnan's multi-tasking".
- "Pongadi Neengalum Unga Kadhalum: Wrong ideas, wrongly told".
- "One film at a time".
- "Pongadi Neengalum Unga Kaadhalum". - ↑ "Endha Nerathilum movie review: An average thriller".