இராஜபக்ச குடும்பம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இராஜபக்ச குடும்பம்
தற்போதைய பகுதிஅம்பாந்தோட்டை
தோற்ற இடம்மெதமுலான, வீரகெட்டியா, அம்பாந்தோட்டை மாவட்டம்
உறுப்பினர்கள்
பாரம்பரியங்கள்பௌத்தம்

இராஜபக்ச குடும்பம் (Rajapaksa family) என்பது இலங்கையின் அரசியலில் பெயர் பெற்று விளங்கிய ஒரு குடும்பம் ஆகும்.[1][2]மகிந்த ராசபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பலம் மிக்க குடும்பமாக விளங்கியது இதுவேயாகும்.[3][4] அத்துடன் 2005 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் இக்குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் உயர் அரசியல் பதவிகளை வகித்து வந்தனர்.[5][6] சர்வாதிகாரம், ஊழல், மோசமான ஆட்சி, குடும்ப உறுப்பினர்களுக்குச் சலுகை வழங்கல் என்றவாறு பல்வேறு குற்றச்சாட்டுக்களும் இக்குடும்ப அங்கத்தவர்கள் மீது சுமத்தப்பட்டன.[7] அத்துடன் ராஜபக்ச குடும்பத்தின் செயற்பாடுகள் அரசராட்சி, ஏகாதிபத்திய ஆட்சி போன்றவற்றிற்கு முன்னெடுத்துச் சென்றதாகவும் பல்வேறு அறிக்கைகளும் குற்றச்சாடுக்களும் முன் வைக்கப்படன.[8][9]

பொது பல சேனா போன்ற பௌத்த அமைப்புக்களிற்கு ஆதரவு அளித்தமையினாலும் சிறுபான்மை இன மக்கள் மீது மேற்கொண்ட தக்குதல்களினாலும் ராஜபக்சக்கள் சிறுபான்மை இன மக்களால் வெறுப்பிற்கு உள்ளாகினர். எனினும் 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமையால் பெரும்பாலான சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டனர்.[10] தற்போது இக்குடும்பத்தின் தலைவராக இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராசபக்ச விளங்குகின்றார்.

மேற்கோள்கள்

  1. இலங்கை அரசியலில் இராஜபக்சே குடும்பம் வளர்ந்த கதை, பகுதி 1
  2. இலங்கை அரசியலில் இராஜபக்சே குடும்பம் வளர்ந்த கதை, பகுதி 2
  3. தேசியத் தலைவராக உருவெடுத்த மகிந்த ராஜபக்சே - மூன்றாம் பாகம்
  4. Perera, Amantha (28 April 2010). "The Long Reach of Sri Lanka's Rajapaksa Dynasty". டைம் இம் மூலத்தில் இருந்து 17 ஆகத்து 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130817133129/http://www.time.com/time/world/article/0,8599,1984484,00.html. 
  5. Chu, Henry (25 August 2007). "Ruling Sri Lanka is a family affair". Los Angeles Times. http://articles.latimes.com/2007/aug/25/world/fg-brothers25. 
  6. "Sri Lanka". Freedom in the World 2012. Freedom House. Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 2016-01-31.
  7. "Sirisena dethrones Rajapaksa in Sri Lanka". Khaleej Times இம் மூலத்தில் இருந்து 10 ஜனவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150110120216/http://www.khaleejtimes.com/kt-article-display-1.asp?xfile=data%2Finternational%2F2015%2FJanuary%2Finternational_January250.xml&section=international. பார்த்த நாள்: 10 January 2015. 
  8. "Sri Lanka votes for Sirisena: What went wrong from Rajapaksa". The Economist Times. 11 January 2015. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/sri-lanka-votes-for-sirisena-what-went-wrong-from-rajapaksa/articleshow/45833503.cms. பார்த்த நாள்: 11 January 2015. 
  9. "Sri Lanka needs a true human being, not a king – Maithripala". adaderana.lk. http://adaderana.lk/news.php?mode=beauti&nid=29378. பார்த்த நாள்: 11 January 2015. 
  10. Haviland, Charles (18 November 2010). "Sri Lanka to inaugurate leader with 'biggest rice cake'". BBC News. http://www.bbc.co.uk/news/world-south-asia-11783302. 
"https://tamilar.wiki/index.php?title=இராஜபக்ச_குடும்பம்&oldid=24501" இருந்து மீள்விக்கப்பட்டது