இராசமனோகரி புலேந்திரன்
இராசமனோகரி புலேந்திரன் | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for வன்னி தேர்தல் மாவட்டம் | |
பதவியில் 1989–2000 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெப்ரவரி 7, 1949 |
இறப்பு | திசம்பர் 30, 2014 | (அகவை 65)
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | ஐக்கிய தேசிய முன்னணி |
துணைவர் | கே. ரி. புலேந்திரன் |
பிள்ளைகள் | அபிராமி, துர்கா |
வாழிடம்(s) | மனிங்டன்டவுன் தொடர்மாடி, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 8, இலங்கை. |
இராசமனோகரி புலேந்திரன் (Rasamanohari Pulendran, 7 பெப்ரவரி 1949 - 30 டிசம்பர் 2014) இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான,[1] இவர், இலங்கை கல்வி இராசாங்க அமைச்சராகப் பதவியில் இருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
இராசமனோகரி புலேந்திரன் முன்னாள் யாழ்ப்பாணம் நகர முதல்வர் துரைராஜா, நாகேசுவரி ஆகியோருக்கு 1949 சூலை 2 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவரது கணவர் கே. ரி. புலேந்திரன் பருத்தித்துறையைச் சேர்ந்தவர். வவுனியா முன்னாள் நகரசபை உறுப்பினராகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளராகவும் இருந்தவர். 1983 சனவரி 19 இல் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படுவோரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்.[2]
அரசியலில்
இராசமனோகரி புலேந்திரன் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியா தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 3,260 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] பின்னர் 1994 தேர்தலிலும் அதே கட்சியின் சார்பில் போட்டியிட்டு 2,217 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[4]
மறைவு
இராசமனோகரி புலேந்திரன் 2014 டிசம்பர் 30 அன்று தனது 65வது அகவையில் கொழும்பில் காலமானார்.[5]
மேற்கோள்கள்
- ↑ "Pulendran, Rasa Manohari (Mrs.)". இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 8 மே 2015.
- ↑ சச்சி சிறீகாந்தா (11 டிசம்பர் 2002). "Analyzing the Tamil Victims of LTTE's Power". sangam.org. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Result of Parliamentary General Election 1989" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-05-08.
- ↑ "Result of Parliamentary General Election 1994" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-05-08.
- ↑ "Rasamanohari Pulendran: Obituary". 31 டிசம்பர் 2014. Archived from the original on 2015-02-27. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
- 1949 பிறப்புகள்
- 2014 இறப்புகள்
- இலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கை இந்துக்கள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள்
- வவுனியா மாவட்ட நபர்கள்
- இலங்கைத் தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்
- இலங்கையின் இராசாங்க அமைச்சர்கள்
- இலங்கைத் தமிழ்த் தொழிலதிபர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கையின் வட மாகாண நபர்கள்