இரமாபாய் (திரைப்படம்)
இரமாபாய் (திரைப்படம்) | |
---|---|
இயக்கம் | எம். இரங்கநாத் |
தயாரிப்பு | Y. சிறீனிவாசு |
திரைக்கதை | எம். இரங்கநாத் |
இசை | K. Kalyan |
நடிப்பு | யக்னா செட்டி |
ஒளிப்பதிவு | குருதத் முசிரி |
படத்தொகுப்பு | சஞ்சிவ் ரெட்டி |
கலையகம் | சிறீ பரமேசுவரி ஆர்ட்சு |
வெளியீடு | 14 ஏப்ரல் 2016 |
ஓட்டம் | 117 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
இரமாபாய் (Ramabai) என்பது இந்திய சமூக சீர்திருத்தவாதியும் அரசியல்வாதியுமான பி.ஆர். [[இரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர்|அம்பேத்கரின் முதல் மனைவியான இரமாபாய் அம்பேத்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கன்னட மொழியில் 2016 ஆம் ஆண்டு வெளியான, இந்திய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தை எம். ரங்கநாத் இயக்கியுள்ளார், மேலும் யக்னா ஷெட்டி பெயரிடப்பட்ட நாயகியாகவும், சித்தாராம் கர்னிக் அம்பேத்கராகவும் நடித்துள்ளனர். 14 ஏப்ரல் 2016 அன்று, அம்பேத்கரின் பிறந்தநாளைன்று, இப்படம் வெளியிடப்பட்டது. இரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர் (திரைப்படம்) - 2011 ஆம் ஆண்டு இதே தலைப்பில், மராத்தி மொழியில் மற்றொரு திரைப்படம் எடுக்கப்பட்டது.
நடிகர்கள்
- ரமாபாயாக யக்னா ஷெட்டி
- பி.ஆர்.அம்பேத்கராக, டாக்டர் சித்ராம் காரனிக்
- ஆடிட்டர் சிறீரீநிவாசு
- நாகராஜ்
- வங்கி சனார்தன்
- சுமதிசறீ
- மைசூர் ராமானந்த்
தயாரிப்பு
"I picked up reading materials and even researched her on the Internet in order to learn more about her and that period. I tried a few things while acting but the main inputs came from the director and the team... Through the process, he [Siddaram Karnik] researched Ramabai as well. That's how the script was written. We shot at the exact locations where Ramabai stayed. Major portions were shot in Dharwad and Karwar"
—யக்னா செட்டி, regarding her preparation for the role and filming.[2]
திரைப்பட தயாரிப்பாளர் ஆடிட்டர் சிறீனிவாசு, இப்படத்தை பிப்ரவரி 2015 இல் தயாரிப்பதாக அறிவித்தார். கன்னடத் திரையுலகில் முதன்மையாக வசனம் எழுதும் வாசுதேவ் ஆலூர், இப்படத்துடன் தனது அசல் பெயரான எம். ரங்கநாத் என்ற பெயரால், இப்படத்தை இயக்குவார் என்பது தெரியவந்தது. [3] அதே மாதத்தில், பெங்களூரில் துணை வேடங்களில் நடிக்க, தயாரிப்பாளர்களால் நடிப்புத் தேர்ந்தெடுப்பு நடத்தப்பட்டது. [4] இரமாபாய் கதாபாத்திரத்தில் யக்னா ஷெட்டி நடித்தார். அம்பேத்கரின் வாழ்க்கை, பணி ஆகியன குறித்து தார்வாட்டில் ஆய்வு செய்து கொண்டிருந்த ஒரு கல்வியாளர் சித்தாராம் கர்னிக் என்பவரை, தற்செயலாக அவரை படத்தில் நடிக்க வைத்தார். மார்ச் 27 அன்று தார்வாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது, அதைத் தொடர்ந்து இரமாபாய், பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க பகுதிகளைக் கழித்த இரண்டு இடங்களான கார்வாரில் தொடர்ந்தது. மொத்தம் 30 நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு, ஜூன் 2015 இல் முடிந்தது.
இதையும் பார்க்கவும்
- இரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர் (திரைப்படம்) - இதே தலைப்பில் 2016 இல் வெளிவந்த மராத்தியத் திரைப்படம்
- டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் (திரைப்படம்) - டாக்டர் அம்பேத்கர் பற்றிய 2000 ஆங்கில திரைப்படம்.
மேற்கோள்கள்
- ↑ https://www.thehindu.com/news/cities/bangalore/Remembering-Ramabai/article60149620.ece
- ↑ "Yagna's Next Chronicles Dr Ambedkar's Wife". The New Indian Express. Archived from the original on 21 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
- ↑ "Yajna Shetty Plays Dr.BR. Ambedkar's wife in Ramabai".
- ↑ "Ramabai Ambedkar...audition of the artists".
{{cite web}}
: Missing or empty|url=
(help)