இரத்தப் பணம்
இரத்தப் பணம் (Blood money) என்பது ஒரு குற்றவாளி, பொதுவாக ஒரு கொலையாளி அல்லது அவர்களின் குடும்பத்தினர், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அல்லது உறவினர்களுக்கு இழப்பீடாக வழங்கும் பணம் அல்லது இழப்பீடு ஆகும்.[1]
விளக்கம்
இரத்தப் பணம் என்பது, பேச்சுவழக்கில், ஒரு குற்றவாளியை நீதிக்குக் கொண்டு வருவதற்கான வெகுமதி ஆகும். பிற சூழல்களில் இதன் பொதுவான பொருளாக, ஒரு கொலைகாரன் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்குச் செலுத்தும் பண அபராதம் ஆகும். இந்த அபராதங்கள் குற்றவாளியை அல்லது அவன் உறவினர்களைக் காயமடைந்த குடும்பத்தினரின் பழிவாங்கும் நடவடிக்கையிலிருந்து முழுமையாகப் பாதுகாக்கின்றன. கிறித்துவம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, பண்டைய ஜெர்மானியச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனி மக்களிடையே இழப்பீட்டு முறையில் பொதுவானதாக இருந்தது.[2]
குற்றத்தின் கொடூரத்திற்கு ஏற்ப தரப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகளின் அளவு, சட்டங்களால் நிர்ணயிக்கப்பட்டது. இந்த இரத்தப் பணத்தை யார் வசூலிக்க முடியும், அதைப் பகிர்ந்து கொள்ள யாருக்கு உரிமை உண்டு என்பதையும் இது தீர்மானித்தது. கொலை மட்டுமே மன்னிக்கக்கூடிய குற்றம் அல்ல. பெரும்பாலான வன்முறைக் குற்றங்களுக்கு இரத்தப் பணம் வசூலிக்கப்படலாம். தேவாலயத்தில் ஒருவரைக் கொல்வது அல்லது தூங்கும்போது, அல்லது அரச அரண்மனையின் எல்லைக்குள், உடல் ரீதியாக அவமானப்படுத்தப்படும் (கற்பழிப்பு) சில செயல்கள் இதன் கீழ் வராதவையாக இருந்தன.[3] இதற்குப் பதிலாக மரணதண்டனை விதிக்கப்பட்டது. டாசிட்டசின் கூற்றுப்படி, இத்தகைய குற்றவாளி கொல்லப்படலாம் அல்லது ஒரு பெட்டியில் வைத்து வீசப்படலாம்.[4]
இசுலாம்
இசுலாமியக் கூற்றின்படி, கிசாக்கள் சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இரத்த பணம் செலுத்தப்படுவதற்கு வழிவகுக்கின்றது. இந்தத் தொகை நாட்டுக்கு நாடும் ஒவ்வொரு வழக்குக்கும் ஏற்ப மாறுபடும்.
யூதம்
ஒரு நபரின் வாழ்க்கையானது கடவுளின் சொத்தாகக் கருதப்படுவதால், கொலை செய்யப்பட்டவரின் வாழ்க்கைக்காக இரத்தப் பணத்தை எடுத்துக்கொள்வதை யூத மதம் தடை செய்கிறது.[5]
சப்பான்
சப்பானியக் கலாச்சாரத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இரத்தப் பணம் அல்லது மிமைக்கின் கொடுப்பது பொதுவானது. லூசி பிளாக்மேனின் தந்தை தனது மகளின் கொலைக்கு £450,000 இரத்தப் பணமாக ஏற்றுக்கொண்டார்.[6]
கொரியா
கொரியச் சட்ட திட்டத்தின்படி, சிறிய (அவதூறு) கடுமையான குற்றச் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவருக்கு இரத்தப் பணத்தை வழங்குவது பொதுவானதாக (ஹாபுகியம், தினேஜ்) உள்ளது. பாதிக்கப்பட்டவர் இந்த இரத்தப் பணத்தினை ஏற்றுக்கொண்டால் குற்றவாளி தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவார். பொதுவான நடைமுறையாக இது இருந்தபோதிலும், அசாதாரண வழக்குகளில் இதன் பயன்பாடு சில நேரங்களில் எதிர்ப்புகளுக்கு வழிவகுக்கிறது.[7]
கிறித்தவம்
கிறித்தவர்களின் விவிலியத்தில், பரிசேயர்கள் மற்றும்/அல்லது சன்ஹெட்ரினால் அனுப்பப்பட்ட படைகளுக்கு இயேசு கிறிஸ்துவினை காடிகொடுத்ததற்கு ஈடாக, யூதாசு இசுகாரியோத்து பெற்ற முப்பது வெள்ளி காசுகளைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. கிறித்துவை சிலுவையில் அறையச் செய்த பிறகு, யூதாசு தான் பெற்ற வெள்ளிப் பணத்தைத் தலைமைக் குருக்களிடம் திருப்பிக் கொடுத்தார். ஆனால், தலைமைக் குருக்கள் இந்த "வெள்ளிக் காசுகளை, "கருவூலத்தில் வைப்பது நியாயமல்ல, ஏனெனில் இது இரத்தத்தின் விலை" என்று கூறினர்.[8]
கடற்பயணத்தில்
"சாங்காய்ங்" என்பது மாலுமிகளைக் கட்டாயமாகப் பணியில் அமர்த்தும் நடைமுறையாகும். கப்பல்களுக்கான பணியாளர்களைக் கண்டுபிடிப்பதே பணியமர்த்தும் எஜமானர்களின் முக்கிய வேலையாக இருந்ததால், அவர்களுக்கு "உடலுக்கேற்ற ஊதியம்” வழங்கப்பட்டது. இதனால் முடிந்தவரை கப்பல்களில் பல மாலுமிகளைப் பணியமர்த்த வலுவான ஊக்கம் கிடைத்தது.[9][10] இந்த ஊதியம் இரத்தப் பணம் என்று அழைக்கப்பட்டது.[11]
மேற்கோள்கள்
- ↑ The Editors of Encyclopædia Britannica. "blood money | sociology | Britannica.com". Encyclopædia Britannica. Retrieved 30 July 2016.
- ↑
ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள் தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: .
- ↑ ignavos et imbelles at corpore infames. Gordon translates corpore infames as "unnatural prostitutes", another interpretation is "corporal infamation" (sodomy). Thus Tacitus may refer to rape, even though scholars have speculated that "corporal infamation" could refer to the catholic view of male homosexuality. See David F. Greenberg, The construction of homosexuality, p. 242 f. Consequently some scholars have speculated that the later Germanic concept of Old Norse argr, Langobardic arga, may combine the meanings "effeminate, cowardly, homosexual", see Jaan Puhvel, 'Who were the Hittite hurkilas pesnes?' in: A. Etter (eds.), O-o-pe-ro-si (FS Risch), Walter de Gruyter, 1986, p.154.
- ↑
ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள் தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: .
- ↑ Gottheil, Richard; Amram, David Werner. "Blood Money". Jewish Encyclopedia.
- ↑ "Lucie's father 'helped killer by accepting blood money'". This is London Magazine Ltd. 2007-04-20. Archived from the original on 2009-08-07. Retrieved 2009-03-20.
- ↑ Son Jun-hyun , "The Hankyoreh", November 30, 2010.
- ↑ Matthew 27:6
- ↑ Hope, Ronald (2001). Poor Jack: The Perilous History of the Merchant Seaman. London: Greenhill Books. ISBN 1-86176-161-9.
- ↑ "The Lookout of the Labor Movement" (PDF). Sailors Union of the Pacific. Archived from the original (PDF) on 2003-05-12. Retrieved 2007-04-02.
- ↑ Georgia Smith (1988). "About That Blood in the Scuppers". Reclaiming San Francisco: History Politics and Culture, a City Lights Anthology. City Lights. Archived from the original on 2006-10-11. Retrieved 2007-04-03.