இம்கோய்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இம்கோய் (m̀hgòi) என்பது ஒரு கண்டோனீசு மொழி சொல்லாகும். இதன் பொருள் மன்னிக்கவும் என்பதாகும். சாதாரணமாக எல்லா மொழிகளிலும் "மன்னிக்கவும்" எனும் சொல் இருந்தாலும், இச்சொல்லின் பயன்பாடு சமுதாயங்களிடையே வேறுபடுகின்றன. சில சமுதாயங்களின் பழக்கவழக்கதையும் வெளிப்படுத்திவிடுகின்றன.

சிறப்பு

இச்சொல் ஒரு சாதாரண கண்டோனீசு மொழி சொல் என்றாலும், இச்சொல் ஒரு சமுதாயத்தின் பண்பாட்டை அல்லது நல்பழக்க வழக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுவதே இதன் சிறப்பாகும்.

வீதிகளில், சந்தைகளில், கடைத்தெருக்களில் பொதுவாக ஒருவர் சொல்வது இன்னொருவருக்கு விளங்கவில்லையென்றால், பாதையில் எவரேனும் குறுக்காக நின்றால், ஒருவரது கவனத்தை தன்பக்கம் திருப்புவதற்கென்றால், ஹொங்கொங் வாழ் ஹொங்கொங்கர்கள் இயல்பாகவே "இம்கோய்" எனும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

வண்டில் தள்ளுவோர் மற்றும் மூடை சுமப்போர்

சாதாரணமாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் சந்தைப்பகுதியில் வண்டில் தள்ளுவோர், மூடை சுமப்போர் தமது பணிகளின் போது எதிரே உள்ளவரை திசைத்திருப்ப ஏய் அல்லது ஓய் போன்ற சொற்களையே பயன்படுத்துகின்றனர். எம்ஜிஆர் நடித்த ரிக்சாகாரன் திரைப்படத்திலும், எதிரே உள்ளோரின் கவனத்தை திருப்ப ஓரம் போ! ஓரம் போ!! என்றே கூவிச்செல்வார். ஆனால் ஹொங்கொங்கில் அதே பணிகளை செய்வோர் "இம்கோய்" எனும் சொல்லையே பயன்படுத்துகின்றனர். இது ஹொங்கொங்கரின் நல்பழக்க வழக்கங்களில் ஒன்றாகும்.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=இம்கோய்&oldid=29320" இருந்து மீள்விக்கப்பட்டது