இன்யோயிட்டு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
இன்யோயிட்டு
Inyoite
பொதுவானாவை
வகைநெசோபோரேட்டுகள்
வேதி வாய்பாடுCaB3O3(OH)5·4H2O
இனங்காணல்
படிக இயல்புகரடுமுரடான உருண்டை அல்லது சிறுமணி
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்புசரிபிளவு {001}, வேறுபடுத்தி காட்டும் {010}
முறிவுஒழுங்கற்றது
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2
ஒப்படர்த்தி1.875
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (−)
ஒளிவிலகல் எண்nα = 1.495 nβ = 1.505 – 1.512 nγ = 1.520
இரட்டை ஒளிவிலகல்அதிகபட்சம் δ = 0.025
நிறப்பிரிகைபலவீனம்
மேற்கோள்கள்[1][2]

இன்யோயிட்டு (Inyoite) என்பது CaB3O3(OH)5·4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இது ஓரு நெசோபோரேட்டு வகை கனிமமாகும். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் இன்யோ மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் கனிமத்திற்கு இன்யோயிட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது. 1914 ஆம் ஆண்டில் இக்கனிமம் கண்டறியப்பட்டது.

P21/a என்ற இடக்குழுவில் a = 10.63, b = 12.06, c = 8.4 [Å]; β = 114.03°; Z = 4 என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் இக்கனிமம் ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் இன்யோயிட்டு படிகமாகிறது. நிறமற்ற நிலையில் இருக்கும் இன்யோயிட்டு நீர்நீக்கப்பட்டால் வெண்மை நிறத்திற்கு மாறுகிறது.

பிரைசீட்டு, மேயரோபெரைட்டு, கோல்மனைட்டு, ஐதரோபோரசைட்டு, யுலெக்சைட்டு மற்றும் ஜிப்சம் ஆகிய கனிமங்கள் இன்யோயிட்டு கனிமத்துடன் சேர்ந்து காணப்படுகின்றன.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் இன்யோயிட்டு கனிமத்தை Iyo[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

  1. Mindat.org
  2. Handbook of Mineralogy
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=இன்யோயிட்டு&oldid=276422" இலிருந்து மீள்விக்கப்பட்டது