இன்பத்தமிழ் ஒலி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இன்பத்தமிழ் ஒலி என்பது அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிச் சேவை ஆகும். இது 1996 மே 15 இல் இலங்கை வானொலி முன்னாள் ஒலிபரப்பாளர் பாலசிங்கம் பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டது. தனியான வானொலிக் கலையகத்தைக் கொண்டுள்ள இவ்வானொலி நிலையமே ஆஸ்திரேலியாவில் 24 மணித்தியாலங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை முதன் முதலில் ஒலிபரப்பியது. உலகில் இரண்டாவது 24 மணி நேர தமிழ் வானொலி ஆகும்.[1]

நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் அவுஸ்திரேலியத் தலைநகர் மண்டலம் ஆகிய மாநிலங்களுக்கு இன்பத் தமிழ் ஒலி தனது தமிழ் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அத்துடன் செய்மதி ஊடாக அவுஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் நியூசிலாந்துக்கும் இன்பத்தமிழ் ஒலி செல்கிறது.[1]

சாதனைகள்

  • ஆஸ்திரேலியாவில் முதன் முதலில் நேயர்களுடன் நேரடி உரையாடல் (talk back) நிகழ்ச்சியை நடத்தி தொடர்ந்து இன்றும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியை பாலசிங்கம் பிரபாகரன் நடத்தி வருகிறார்.[1]
  • இலங்கையில் சக்தி எஃப்.எம். வானொலியுடன் இணைந்து நேயர்களுடன் நேரடி உரையாடல் நிகழ்ச்சியை நடத்தியது.
  • கனடா, லண்டன், இலங்கை வானொலிக் கலையகங்களுடன் இணைந்து ஒரே நேரத்தில் நேயர்களுடன் கலந்துரையாடி சாதனை படைத்தது.
  • சிங்கப்பூர் ஒலி 96.8 தமிழ் வானொலிச் சேவையுடன் இணைந்து சிங்கப்பூர், அவுஸ்திரேலிய நேயர்களுடன் நேரடி உரையாடல் நிகழ்ச்சியை நடத்தியது.

அறிவிப்பாளர்கள்

இன்பத்தமிழ் ஒலியின் அறிவிப்பாளர்களாக பாலசிங்கம் பிரபாகரன், திலகா பிரபாகரன், களுவாஞ்சிக்குடி யோகன், செந்தூரன் சிதம்பரநாதன், செல்வி ரஞ்சன், யூசவ், சுவேதன் தனபாலசிங்கம், குலேந்திரன் பரமானந்தசிங்கம் ஆகியோர் சேவையாற்றுகின்றனர்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 கந்தையா, ஆ., கங்காரு நாட்டில் தமிழரும் தமிழும், சிட்னி, டிசம்பர் 2004

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இன்பத்தமிழ்_ஒலி&oldid=26206" இருந்து மீள்விக்கப்பட்டது