இந்துமதி கதிரேசன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்துமதி கதிரேசன் (Indumathi Kathiresan) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கால்பந்து வீராங்கணையாவார். 1994 ஆம் ஆண்டு சூன் மாதம் 5 ஆம் நாள் இவர் பிறந்தார். நடுக்கள ஆட்டக்காரராகவும் இந்திய மகளிர் தேசிய கால்பந்து அணியின் தலைவராகவும் இந்துமதி விளையாடுகிறார்.

பன்னாட்டுப் போட்டிகள்

2014 ஆம் ஆண்டு முதல் இந்துமதி இந்திய மகளிர் தேசிய கால்பந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.[1] 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு மகளிர் கால்பந்தாட்ட சாம்பியன் பட்டப் போட்டியில் இந்துமதி 6 கோல்களை அடித்தார். பின்னர் தேசிய அணியின் வழக்கமான தேர்வாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய அணியின் ஒரு பகுதியாகவும் இந்துமதி இருந்தார்.[2] 2016 தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு மகளிர் கால்பந்தாட்ட சாம்பியன் போட்டிக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டியில் அணிக்காக 2 கோல்களை அடித்தார்.[3] பின்னர் 2019 ஆம் ஆண்டு தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு மகளிர் கால்பந்தாட்டப் போட்டியில் 4 கோல்களை அடித்து அப்போட்டியில் அதிக கோள்கள் அடித்த வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றார்.

கால்பந்தாட்ட புள்ளி விவரங்கள்

அனைத்துலகப் போட்டி தலைமையும் கோல்களும்
ஆண்டுகள் தலைமை கோள்கள்
2014 7 6
2015 0 0
2016 2 2
2017 6 0
2018 2 0
2019 17 4
Total 34 12

கௌரவங்கள்

  • 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
  • தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு மகளிர் கால்பந்தாட்ட சாம்பியன் 2014, 2016-2017, 2019

மேற்கோள்கள்

  1. Das, Shankar (2 July 2014). "AIFF confirm China tour for India women's team ahead of Asian Games". SportsKeeda. http://www.sportskeeda.com/football/aiff-confirm-china-tour-for-india-womens-team-ahead-of-asian-games. பார்த்த நாள்: 2 January 2017. 
  2. "Women's Team to Camp in Shillong, Meghalaya". The All India Football Federation. 7 January 2016 இம் மூலத்தில் இருந்து 3 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170103004432/https://www.the-aiff.com/news-center-details.htm?id=6912. பார்த்த நாள்: 2 January 2017. 
  3. "Women's squad announced for SAFF Championships". SportsStarLive. 22 December 2016. http://www.sportstarlive.com/football/indian-football/womens-squad-announced-for-saff-championships/article9440620.ece. பார்த்த நாள்: 2 January 2017. 
"https://tamilar.wiki/index.php?title=இந்துமதி_கதிரேசன்&oldid=25632" இருந்து மீள்விக்கப்பட்டது