இந்தியத் தேயிலை சங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தியத் தேயிலை சங்கம்
உருவாக்கம்1881
தலைமையகம்
வலைத்தளம்indiatea.org

இந்தியத் தேயிலை சங்கம் (Indian Tea Association) என்பது இந்தியத் தேயிலை உற்பத்தியாளர்களின் வர்த்தக சங்கமாகும். இதன் தலைமை அலுவலகம் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் (கல்கத்தா) உள்ளது.

வரலாறு

பிரித்தானிய இந்தியாவில் தேயிலைத் தோட்டக்காரர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும், இந்தியத் தேயிலை நுகர்வினை ஊக்குவிப்பதற்காகவும் 1881ஆம் ஆண்டில் இந்த சங்கம் நிறுவப்பட்டது.[1] இதற்கு இலண்டனிலும் இந்தியாவிலும் அலுவலகங்கள் இருந்தன. இந்தச் சங்கம் தேயிலைத் தோட்டங்களுக்கான தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விதிகளையும் வகுத்தது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொழிலாளர்களின் நடத்தையின் தரத்தை உயர்த்துவதிலும் பங்கேற்றது.[2]

மேற்கோள்கள்

  1. Anandi Ramamurthy (2003). Imperial Persuaders: Images of Africa and Asia in British Advertising. Manchester: Manchester University Press. ISBN 0719063787.
  2. Sarah Besky (2014). The Darjeeling Distinction: Labor and Justice on Fair-Trade Tea Plantations in India. Berkeley: University of California Press. ISBN 9780520957602.

மேலும் படிக்க

"https://tamilar.wiki/index.php?title=இந்தியத்_தேயிலை_சங்கம்&oldid=28981" இருந்து மீள்விக்கப்பட்டது