ஆ. பழனியாண்டி
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஆ. பழனியாண்டி |
---|---|
பிறந்ததிகதி | பெப்ரவரி 15, 1928 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
ஆ. பழனியாண்டி (பிறப்பு: பெப்ரவரி 15, 1928) தமிழ் நாடு, எடக்கல் எனுமிடத்தில் பிறந்து ஆ. பழனி, கதிரவன் போன்ற புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர் தனது ஆரம்பக் கல்வியை ஜோகூர் பாருவிலுள்ள அரசாங்கப் பள்ளியில் கற்றுத் தமிழில் மேல்நிலைத் தேர்ச்சி பெற்றார்.
தொழில்
1950 முதல் 1957 வரை ஜோகூரிலும், பின்பு 1958 – 1988 வரை சிங்கப்பூரிலும் தமிழாசிரியராகப் பணியாற்றி 1988ல் ஓய்வுபெற்றார்.
பதவிகள்
தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் நன்கு புலமையுள்ள இவர் ஹெண்டர்சன் தமிழ் இளைஞர் மன்றச் செயலாளராகவும், தி.மு.க. ஹெண்டர்சன் கிளையின் தலைவராகவும், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்க உறுப்பினராகவும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகப் பொருளாளராகவும், ஹெண்டர்சன் சமூக நிலைய இந்திய நற்பணிக் குழுவின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இலக்கியப் பணி
1965ல் எழுதத் தொடங்கிய இவர் மரபுக் கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றை எழுதிவந்தாலும் கூட மரபுக் கவிதையிலேயே இவருக்கு ஆர்வம் அதிகம். இவரது கன்னிக் கவிதை ‘தேசிய நாளை வாழ்த்துவோம்’ எனும் தலைப்பில் 1965ல் தமிழ் முரசில் வெளிவந்தது.
எழுதியுள்ள நூல்கள்
- திருமுருக வெண்பா மாலை
- முல்லைப் பூக்கள்
- கவிதைப் பூக்கள்
பெற்ற விருதுகளும், கௌரவங்களும்
- லிம் போ செங் பற்றி இவரால் எழுதப்பட்ட கட்டுரைக்கு தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் பணப்பரிசு
- பொதுச் சேவைக்கான அரசாங்கத்தின் பிபிஎம் விருது (1995)
உசாத்துணை
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு