ஆ. குணநாதன்
Jump to navigation
Jump to search
ஆ. குணநாதன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஆ. குணநாதன் |
---|---|
பிறந்ததிகதி | செப்டம்பர் 13 1965 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
ஆ. குணநாதன் (பிறப்பு: செப்டம்பர் 13 1965) மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஏ.எஸ்.குணா, ஏ.ஜி.கலைதாசன், ஏ.எஸ்.ஜி. ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதிவரும் இவர் ஆசிரியராகத் தொழில்புரிந்து வருகின்றார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1982-ஆம் ஆண்டு தொடத்திலிருந்து சிறுகதைகள், ஹைக்கூ கவிதைகள், பேட்டிக் கட்டுரைகள் போன்ற பல துறைகளிலும் பங்களிப்பு நல்கிவரும் இவரின் இத்தகைய ஆக்கங்களை மலேசியா தேசிய பத்திரிகைகளும், இதழ்களும் பிரசுரித்துள்ளன. மலேசியா வானொலி ஒலிபரப்பியுள்ளது.
ஊடகத்துறையில்
இவர் மயில், தினமுரசு, புதிய பூச்செண்டு (தமிழ்நாடு) ஆகிய இதழ்களில் பகுதி நேரமாக நிருபராகவும் பணியாற்றியுள்ளார்.
பரிசுகள்
- தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் கட்டுரைப் போட்டியில் மாணவர் பிரிவில் முதல் பரிசு (1998)
- தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் சிறுகதைப் போட்டியில் மாணவர் பிரிவுப் பரிசு (2001)
- மலாயாப் பல்கலைக் கழகப் பேரவைச் சிறுகதைப் போட்டியில் மாணவர் பிரிவுப் பரிசு (1999)
- தமிழ் எழுத்தாளர் தின கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு (2003)