ஆ..! (புதினம்)
Jump to navigation
Jump to search
ஆ..! | |
நூலாசிரியர் | சுஜாதா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | துப்பறியும் நாவல் |
வெளியீட்டாளர் | கிழக்குப் பதிப்பகம்
மறுபதிப்பு - விசா பதிப்பகம். [1] |
வெளியிடப்பட்ட நாள் | 2011 |
பக்கங்கள் | 240 பக்கங்கள் |
ISBN | 978-81-8493-589-9 |
ஆ..!, சுஜாதாவால் எழுதப்பட்டு 1992-இல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது.
கதைக் கரு
தினேஷ்குமார் என்னும் இளைஞன் கணிப்பொறி மென்பொருள் வல்லுநராகப் பணிபுரிகிறான். அவன் மண்டைக்குள் சில குரல்கள் கேட்கின்றன. அவை அவனைத் தற்கொலைக்குத் தூண்டுகின்றன. அந்த குரல்கள் கேட்பதன் காரணம் என்ன, மூளையில் பாதிப்பா, மனநல பாதிப்பா, பேயா, முற்பிறவி நினைவா என எல்லாரும் அவனைக் குழப்புகின்றனர். கொலையாளி என்று குற்றம் சாட்டப்படும் தினேஷ்குமாரை விடுவிக்க வருகிறார்கள் வக்கீல்கள் கணேஷ் வசந்த். இந்த வினோத குரல்களின் காரணம் என்ன என்பதைப் பற்றிக் கண்டறிவதாகச் செல்லும் கதை.
கதை மாந்தர்கள்
- கணேஷ்
- வசந்த்
- தினேஷ்குமார்
- ரவி
- தேவகி
- சுதர்சன் ராஜா
- பீட்டர்சன்
- யோகி
- டாக்டர் மேகநாத்
- டாக்டர் சாம்பசிவராவ்
- டாக்டர் பாபு
- கிருஷ்ணா
- ஜயலக்ஷ்மி
- சர்மா மற்றும் பலர்.