ஆஷா படேல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஆஷா படேல்
குசராத்து சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2017–2021
முன்னையவர்நாராணன்பாய் படேல்
தொகுதிஉஞ்சா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1977-09-06)6 செப்டம்பர் 1977
இறப்பு12 December 2021(2021-12-12) (aged 44)
அகமதாபாத், குஜராத், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
முன்னாள் மாணவர்ஹேமச்சந்ராயா வடக்கு குஜராத் பல்கலைக்கழகம்
பணிவணிகம் மற்றும் விவசாயம்

ஆஷா படேல் (Asha patel) (6 செப்டம்பர் 1977-12 டிசம்பர் 2021) இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார்.

வாழ்க்கை வரலாறு

குஜராத் மாநிலத்தின் மெக்சானா மாவட்டத்தில் உள்ள விசோல் கிராமத்தைச் சேர்ந்த இவர் துவாரகதாஸ் - ஹிராபென் இணையரின் மகள் ஆவார்.[1]

1997 ஆம் ஆண்டில் பி. எஸ்சி படித்த இவா், 2000 ஆம் ஆண்டில் ஹேமச்சந்திரச்சார்யா வடக்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]பேராசிரியராகப் பணிபுரிந்த இவர் உன்ஜாவில் உள்ள உமியா ஆலயத்தின் நிர்வாக உறுப்பினராக இருந்தார்.

2015 இல் நடைபெற்ற பட்டிதார் சமூகத்தினர் நடத்திய இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்றார்.[2]

2017 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் உஞ்சா சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் இருந்து வெளியேறி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 2019 இல் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதே தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5]

12 திசம்பர் 2021 அன்று தீவிர டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அகமதாபாது நகரில் தனது 44 ஆம் வயதில் இறந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

திருமணம் செய்து கொள்ளாத இவருக்கு மூன்று மூத்த சகோதரிகளும் ஒரு இளைய சகோதரரும் இருந்தனர்.[2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Patel Ashaben Dwarkadas(Indian National Congress(INC)):Constituency- UNJHA(MAHESANA) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2021-12-13.
  2. 2.0 2.1 "BJP Unjha MLA dies following dengue-related complications" (in en). The Indian Express. 2021-12-12. https://indianexpress.com/article/cities/ahmedabad/bjp-unjha-mla-dies-7668832/. "BJP Unjha MLA dies following dengue-related complications". The Indian Express. 12 December 2021. Retrieved 12 December 2021.
  3. "Asha Patel joins Gujarat BJP, says 25 more Congress MLAs unhappy". DNA India (in ஆங்கிலம்). Retrieved 2021-12-13.
  4. "Gujarat: Narayan Lallubhai Patel's reign ends in Unjha APMC, Asha Patel bags 10 seats". DNA India (in ஆங்கிலம்). Retrieved 2021-12-13.
  5. 3 Congress MLAs quit party in Gujarat in last 4 days: Turmoil in Grand Old Party?
"https://tamilar.wiki/w/index.php?title=ஆஷா_படேல்&oldid=269064" இலிருந்து மீள்விக்கப்பட்டது