ஆல்பர்ட் ராமசாமி
ஆல்பர்ட் ராமசாமி (பிரெஞ்சு மொழி: Albert Ramasammy) நவம்பர் 13, 1923 இல் பிறந்தார்.[1] இவர் பிரான்சு நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் ரீயூனியன் சோசலிச கட்சி சார்பாக செனட்டராகப் பணியாற்றினார். இவர் இரீயூனியன் தமிழர் ஆவார்.
சொந்த வாழ்க்கை
இவர் இந்தியாவிலிருந்து ரீயூனியன் தீவிற்கு ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் சமயத்தால் இந்துவாயினும் கிறித்துவ சமயத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது சக மாணவர்கள் இனவெறியால் தாக்கியதால் பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டார். இவர் 1943 இல் மடகாசுக்கர் தீவிற்கு அனுப்பப்பட்டார். பின்னர் ஆசிரியர் தொழிலை செய்து வந்தார். 1963 ஆம் ஆண்டு இரீயூனியன் தீவில் ஒரு கல்விக்கூடத்தின் பேராசிரியர் ஆனார்.
அரசியல் வாழ்க்கை
தொழில்ரீதியாகத் தலைமை ஆசிரியராக இருந்தாலும், ரீயூனியனில் பிராந்திய கவுன்சிலில் நுழைந்து பின்னர் செனட் சபைக்கு செப்டம்பர் 25, 1983 தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சபை அக்டோபர் 1, மட்டும் 1992 வரை நாடாளுமன்ற கூட்டத்தில் நடைபெற்றது.[2] இவர் உலகளாவிய வாக்குரிமை, விதிமுறை, பொது நிர்வாகத்தின் அரசியலமைப்பு சட்டங்கள், சட்டம் ஆகியவற்றுக்கான நிர்வாக குழுக்களில் உறுப்பினராய் இருந்தார். இவர் 2000 ஆண்டிற்கு பின் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். இவரது அணுகுமுறைகள் பலருக்கு பிடித்திருந்ததால், இத்தீவின் பிரபலமானவர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
மேலும் பார்க்க
சான்றுகள்
- ↑ "Décès du sénateur Albert Ramassamy". francetélévisions (in French). 5 November 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Catalogue" (PDF). Dénomination de l’Hôtel de Région (in French). 10 நவம்பர் 1998. Archived from the original (PDF) on 2 மார்ச் 2008. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)