ஆற்றுத்துறை
Jump to navigation
Jump to search
ஆற்று நீரை மக்கள் பயன்படுத்தும் இடத்தை ஆற்றுத்துறை என்பர். இதனைப் பற்றிப் பண்டைய இலக்கியங்கள் சொல்லும் செய்திகள் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளன.
இலக்கியச் செய்திகள்
- புகார் நகரத்தின் காவிரி ஆற்றிலும் [1] நல்லியக்கோடனின் தலைநகர் 'நன்மாவிங்கை'யிலும் [2] மகளிர் தனித்து நீராடுவதற்கென ஆற்றுத்துறைகள் இருந்தன. அவற்றை 'உண்துறை' [3],[4] என்றனர். பனித்துறை என்பது பனிக்காலத்தில் நீராடுவதற்கென்றே அக்கால வீட்டு மனைகளில் அமைக்கப்பட்டிருந்த துறை. இவை ஆற்றோர மனைகள்[5].
அடிக்குறிப்பு
- ↑ துறைதுறைதோறும், பொறை உயிர்த்து ஒழுகி, நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்புஅகம் புகுதொறும், புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடைய (பொருநராற்றுப்படை 239-241)
- ↑
துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய
பொரு புனல் தரூஉம், போக்கு அரு மரபின்,
தொல் மா இலங்கைக் கருவொடு பெயரிய
நல் மா இலங்கை (சிறுபாணாற்றுப்படை 117 முதல்) - ↑ மகளிர் மட்டும் நீராடும் உள்பக்கத் துறை.
- ↑
வண்டல் ஆயமொடு உண்துறைத் தலைஇ,
புனல் ஆடு மகளிர் (பெரும்பாணாற்றுப்படை 311) - ↑
குண்டு நீர்ப்
பனித்துறைக் குவவு மணல் முனைஇ, மென் தளிர்க்
கொழுங் கொம்பு கொழுதி, நீர் நனை மேவர,
நெடுந் தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி,
மணம் கமழ் மனைதொறும் பொய்தல் (மதுரைக்காஞ்சி 585 முதல்)