ஆற்றுக்கால் பகவதி கோவில்
ஆற்றுக்கால் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 8°28′N 76°58′E / 8.47°N 76.96°E |
பெயர் | |
பெயர்: | ஆற்றுக்கால் பகவதி கோவில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளா |
மாவட்டம்: | திருவனந்தபுரம் |
அமைவு: | ஆற்றுக்கால் |
கோயில் தகவல்கள் |
ஆற்றுக்கால் பகவதி கோவில் (Attukal Bhagavathy Temple) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் பொங்கல் திருவிழா பிரசித்தி பெற்றது. இக்கோவிலானது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு அருகில் 2 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.
தலவரலாறு
இக்கோவிலில் தெய்வமாக இருப்பது கண்ணகி (பார்வதி) ஆகும். கண்ணகி கோவலனின் கொலைக்கு மதுரையில் நீதி கேட்டபின் இங்கே ஆற்றுக்காலில் சிறுமியாய் அவதரித்து ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த பெரியவரிடம் ஆற்றைக் கடக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறாள். பெரியவரோ, சிறுமி தனியாய் இருப்பதை அறிந்து அன்போடு தன் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார். வீட்டிற்குச் சென்றதும் மாயமாய் மறைந்த சிறுமி பின்னர் பெரியவரின் கனவில் வந்து தனக்கு கோயில் கட்டுமாறு சொல்கிறாள். அதனால் கட்டப்பட்டதே இக்கோவில் என்பது தலவரலாறு ஆகும்.
பொங்கல் திருவிழா
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலின் முக்கிய நிகழ்வும் இத்திருவிழாவே ஆகும். இப்பொங்கல் விழாவில் சுமார் 10 லட்சம் பெண்கள் கலந்து கொள்வர்.[1]
பிற திருவிழாக்கள்
- மண்டல விரதம்
- வினாயகர் சதுர்த்தி
- சரஸ்வதி பூஜை
- சிவராத்திரி
- கார்த்திகை தீபம்
- ஆயில்ய பூஜை
- ஐஸ்வர்ய பூஜை
- நிரையும் புத்தரிசியும் (இது வயலில் அறுவடைக்கு முன்னர், கொஞ்சம் நெற்கதிர்களை அறுத்து வந்து சாமிக்குப் படையலிடுவது)
- அகந்தநாம ஜபம்
மேற்கோள்கள்
- ↑ "Guinness World Records - News - Let's hear it for the ladies!". Guinness World Records. 03 2008 இம் மூலத்தில் இருந்து 2009-02-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090208152651/http://guinnessworldrecords.com/news/2008/03/080304.aspx. பார்த்த நாள்: 2009-02-19.